திங்கள், 19 ஆகஸ்ட், 2013

தலைவாவும் - கொங்கோ நாட்டு கொரில்லாக்களும்

கோங்கோ நாட்டின் காடுகளுக்குள் வசிக்கும் கொறில்லாக்கள் பற்றிய விவரனத்தை பார்த்துக் கொண்டிருந்த போது குழுக்களாக வாழும் அந்த விலங்குகள் எவ்வாறு தமது தலைவனை தெரிவு செய்கின்றன என்றும் தலைமைத்துவம் வகிக்கும் அந்த குரங்கு எவ்வாறு தனது குழுவின் இருப்பையும் அதன் வளர்ச்சியையும் மையப்படுத்தி செயற்படுக்கின்றது என்பதையும் அதே போல் வேறு ஏதேனும் விலங்குகலாள் அல்லது மனிதர்களாள் தனது குழுவுக்கு அச்சுருத்தல் ஏற்படும் போது குழுவினது அங்கத்தவர்களை பாதுகாக்க தானே உயிரை பணயம் வைக்கின்றனவே தவிர தனது குழுவினது கீழ்மட்ட உருப்பினர்களை ஆபத்தை நோக்கி அனுப்பிவிட்டடு தலைமை பதுங்குவதில்லை


 காடு தொடர்பான அறிவு அனுபவம் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு தலைமையின் முதிர்ச்சி தீர்மாணிக்கப்பட்டாளும் தலைமையின் இருப்பு குழுவின் பெண் உருப்பினர்களிடமே உள்ளதையும் அதே போல் குழுவுக்குள் புதிதாக தலைமையை அடைய விரும்பும் ஏனைய கொரில்லாக்கள் எவ்வாறு முயல்கின்றன என்றும் ஒரு கட்டத்தில் தலைமையை அடைய விரும்பும் குரங்கிற்கும் தலைவனாக இருக்கும் குரங்கிற்கும் இடையிலான நேரடியான சண்டையின் மூலம் ஒன்று கொல்லப்பட மற்றயது தலைமைத்துவத்தை கைப்பற்றும் ஒரு வேளை தலைவனாக இருக்கும் கொரில்லா கொலை செய்யப்பட்டாள் புதிதாக தலைமைக்குவரும் கொரில்லா அந்த குழுவில் உள்ள அனைத்து குட்டிகளையும் கொன்றுவிடும் காரணம் குழுவில் உள்ள அனைத்து குட்டிகளும் தலைவனாக இருந்த கொரில்லாவின் குட்டிகளாகஇருக்கும்


இவை வனவிலங்கினம் ஒன்றின் வாழ்கை முறையினை நீண்டகாளமாக ஆய்வு செய்து தொகுக்கப்பட்ட தகவல்கள்

ஆரிஸ்டாட்டிலின் கூற்றுப்படி ஒரு சமூகப்பிராணியான மனிதன் சமூகமாக வாழமுற்படும் போது அரசியல் தோற்றம் பெறுகிரது புராதன கிரேக்கர்களாள் வரைவிலக்கனப்படுத்தப்பட்ட அந்த அரசியல் பல நுற்றாண்டுகiளைக் கடந்து மனிதன் என்னும் விலங்கினது இருப்பை தீர்மாணிக்கும் மாபெரும் சக்தியாக வளர்ந்து நிற்கிரது நூதன சிவில் சமூகத்தின் ஒவn;வாரு செங்கலும் அரசியல் என்ற சீமேந்தாலேயே இணைக்கப்பட்டுள்ளது
கல் யுகத்தில் ஆரம்பித்து பல்வேறு பரிணாமங்களை கடந்து தகவல் யுகத்தில் உலகமே ஒரு கணனிக்குள் சுருங்கிவிட்ட நிலையில் மனித இனம் எனைய விலங்குகளை விட தம்மை வேறுபடுத்திக் கொண்டுவிட்டபோதும் இன்னும் எமக்குள் அந்த கல்யுகத்துக்கு முந்தைய காட்டுத்தனங்கள் எஞ்சியிருக்கின்றன என்பதற்கு மிகச்சிறந்த அண்மைய உதாரணம் தலைவா திரைப்படத்தின் மீதான தடை

ஆமாம் யாரும் தடைவிதிக்க வில்லையே என்று உங்களில் சிலர் சொல்வது புரிகிரது இல்லை உண்மை என்ன வென்றாள் அரசியல் வாதியான ஜெயலலிதா இந்த திரைப்படத்தை தடுக்க தன்னால் ஆன அனைத்தையும் செய்கிரார்

முதலில் தலைவா என்பது எந்த வித சினிமா பெறுமதிகளும் இல்லாத மிகமிக கேனைத்தனமாக எடுக்கப்பட்ட அர்த்த சூனியமான ஒரு தரம் இல்லாத மற்றும் ஒரு இந்திய திரைப்படம் எஸ் ஏ சந்திரசேகர் போன்றவர்கள் தாம் ஒரு பெரிய அரசியல் புரட்சிப்படம் எடுத்துவிட்தாக நினைத்துக் கொண்டிருப்பது கொடுமையிலும் கொடுமை
அது அப்படியிருக்க இந்தியா என்னும் ஜனநாயக நாட்டில் எந்தவித அர்த்தமும் இல்லாத தலைவா திரைப்படத்தை வெளியிடவிடாமல் தடுப்பதானது கொங்கோ வனாந்தர கொரில்லாக்கள் தமது இன குட்டிகளை கொலை செய்வதை ஒத்தது தமது அதிகாரத்துக்கு சவாலாக வரக்கூடும் என்ற அச்சத்தில் எதுவும் செய்யமுடியாத அந்தக்குட்டிகளை கொலை செய்யும் கொரில்லாவும் சரியாக இரண்டு காட்சிகள் தொகுக்கப்படாத தலைவாத்திரைப்படத்தை தடுத்து நிறுத்தும் ஜெயலலிதாவும் உருவத்தில் மட்டுமே வேறுபடுகின்றனர் இருதரப்பினதும் நடவடிக்கைகளும் தமது பரிணாம படிநிலைகளை வெளிப்படுத்துகின்றன 


நடிகiயாக இருந்து அரசியலுக்கு வர ஜெயலலிதாவுக்கு என்ன ஜனநாயக உரிமை இருக்கிரதோ அதே ஜனநாயக உரிமை மற்றய அனைத்து குடிமக்களுக்கும் உள்ளது என்பதை அவர் மறந்திருப்பது மட்டுமல்ல மற்றவர்களுக்கு இருக்கும் அடிப்படை உரிமைகளை சூழ்ச்சிகரமாக தடுப்பதானது பலநூற்றாண்டுகளாக மனித இனம் அடைந்த வளர்ச்சியைகடந்து மீண்டும் மிருகமாவதை ஒத்தது

சனி, 3 ஆகஸ்ட், 2013

Why this கொலை வெறி விஜய் டிவி?


கருனாநிதி உயிருடன் இருக்க வாலி என்ற கவி மரணித்தது சிரியாவில் கொல்லப்பட்ட சிவிலியன்களின் எண்ணிக்கை ஒரு இலட்சமானது அமேரிக்கா மக்களை ஒட்டுக் கேட்பதை வெளியே சொன்ன எட்வட் ஸ்னொட்டன் சீனாவிடமும் ரஸ்யாவிடமும் தஞ்சமடைந்தது பொதுபளசேனா இலங்கையில் முஸ்லீம்களை இனவெரி கொண்டு ஒடுக்க  அன்றய தமிழ் அரசியல் தலைவர்கள் என்ன முட்டாள் தனங்களை செய்தார்களோ அதையே ஹகீமும் அதாவுள்ளாவும் எனைய முஸ்லீம் தலைமைகளும் செய்வது என்று பல்வேறு கொடுமைகளை கொஞ்ச நேரம் மறந்துவிட விஜய் டிவியின் சுப்பர்சிங்கரை பார்க்க உட்கார்ந்தாள் மரத்தால் விழுந்தவனை மாடு முட்டிய கதையாய் இந்த ரம்யா!!!
 ஒய் திஸ் கொலை வெறி விஜய் டிவி?

தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் நிகழ்ச்சி தொகுப்பாலர்களை எதை அடிப்படையாக கொண்டு தெரிவு செய்கிரார்கள என்பது புரியவில்லை அது எதுவாக இருந்தாளும் அது சரிவரவில்லை என்பதை ரசிகர்களது பதிவுகளை இணையத்தில் பார்க்கும் போது தெரிகிரது ஆனால் தொலைக்காட்சி நிறுவனங்களும் அவற்றின் முடிவெடுப்பவர்களும் எவ்வளவுக்கு தமது ரசிகர்களை பொருற்படுத்துகிறார்கள் என்பதுவே கேள்வி


றோமர் காலத்தில் மன்னரையும் மக்களையும் மகிழ்விக்க நடத்தப்பட்ட கிளடியேட்டர் சண்டைகளின் நூதன படிநிலையாக உருவெடுத்துள்ள அய்டல் தெரிவு நிகள்ச்சி அமைப்பு தொலைக்காட்சி உலகுக்கு பிரித்தானியரான சய்மன் கவுலினால் அறிமுகம் செய்யப்பட்டது பின்னர் அவர் அதனை அமேரிக்காவின் பொக்ஸ் தொலைகாட்சிக்கு எடுத்துவர அதுவே உளகின் ஒவn;வாரு தொலைக்காட்சி நிறுவனத்தினதும் இன்றி அமையாத நிகள்ச்சி அமைப்பானது தமாக சொந்த நிகள்ச்சி அமைப்புகளை உருவாக்காமல் தொடர்ந்து மேற்கத்தைய நிகள்ச்சிகளை காப்பியடிக்கும் எமது தொலைக்காட்சிகளும் உடனடியாக தாமும் இப்படியான நிகள்ச்சிகளை ஆரம்பித்தாளும் விஜய் டிவியின் சுப்பர் சிங்கர் ஏனைய தொலைக்காட்சிகளின் நிகள்ச்சிகளைவிட வெற்றிகரமானதாகியது அதற்கு பல்வேறு காரணங்களை கூறமுடிந்தாளும் மிக முக்கியமானது நிகள்சியை பார்க்கும் சாதாரனமக்களுக்கு நிகள்ச்சியில் பங்களிப்பவர்கள் தம்மை விட உயர்ந்தவர்கள் என்றோ தம்மைவிட அதிகம் தெரிந்தவர்கள் என்றோ இல்லாமல் தமக்குள் இருந்து வருபவர்கள் தம்மை விட்டு வேறுபட்டு நிற்கும் அந்த மேட்டுக்குடிகளுக்கு சாவாள் விடுவதாகவும் அவர்களது ஈகோவிற்கு எதிராக எழுந்து நிற்கும் தமது உணர்வை பிரதிநிதித்துவம் செய்வதாளும் மக்கள்தம்மை அறியாமலே இந்த நிகள்ச்சியை தமது விருப்புக்குரிய தொரு நிகள்ச்சியாக்கி கொண்டுள்ளனர்

ஆனால் விஜய் டிவியோ தமது நிகள்ச்சின் நிஜமான பிரதிநிதித்துவத்தை புரிந்து கொள்ளாமல் அதன் அடிப்படை யதார்த்தத்துக்கு மாறாக ரசிகர்கள் போட்டியாலர்கள் போன்றவர்களை விட தான் உயர்ந்தவர் மாறுபட்டவர் என்பதை உருதி செய்துகொள்வதையே தனது இலக்காக கொண்டுள்ள றம்யாவை நிகள்சி தொகுப்பாலர் ஆக்கியுள்ளனர் றம்யாவின் நிகள்ச்சி தொகுப்பாற்றலை கூர்ந்து பார்த்தாள் புரிபவை
ரம்யாவுக்கு இசையை பற்றி தெரியாது அல்லது தெரிந்ததை சொல்ல தெரியாது
அவருக்கு தனது பார்வையாலர்களுடன் தன்னை தொடர்புபடுத்தி கொள்ளமுடியாதிருக்கிரது 
 தான் என்ன சொல்கிரேன் என்பது அவருக்கே தெரியாது ஏதோ ஒன்றை சொல்ல ஆரம்பித்து வேறு ஏதாவது கூரி முடிக்கிரார்
றம்யாவுக்கு ஒரு தொகுப்பாலருக்கு இருக்க வேண்டிய (கறிஸ்மா)ஆலுமை இல்லை
இவை எல்லாவற்றையும் விட தன்னால் முடியாது என்பது அவருக்கு தெரியாமல் இருக்கிரது
சன் டிவியை பொருத்தவரை றம்யாக்களை உருவாக்குவதே அவர்கள்தான் ஆனால் விஜய் டிவி உங்களுக்கு ஏன் இந்த கொலை வெறி ஆள மாத்துங்கப்பா
 
  

ஞாயிறு, 10 பிப்ரவரி, 2013

13 கேள்விகள்


டிசம்பர் 13 2001-இல் நாடாளுமன்ற வளாகம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இரையான விவகாரத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்சல் குரு இவையனைத்தையும் திட்டமிட்டதாக தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு இன்று தண்டனை ரகசியமாக நிறைவேற்றப்படவும் செய்யப்பட்டது.

இந்த விவகாரத்தில் அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை விதித்தபோது சமூக ஆர்வலரும்இஇலக்கிய எழுத்தாளரும் அறிவு ஜீவியுமான அருந்ததி ராய் ஒரு கட்டுரை எழுதினார். அதில் அவர் ஒரு 13 கேள்விகளை எழுப்பினார். அதன் தமிழ் வடிவம் இதோ:

கேள்வி 1: நாடாளுமன்றம் தாக்கப்படுவதற்கு சில மாதங்கள் முன்பே அரசும் போலீசும் நாடாளுமன்றம் தாக்கப்படலாம் என்று கூறிவந்துள்ளது. டிசம்பர் 12இ2001-இல் பிரதமர் வாஜ்பாய் கூட்டம் ஒன்றில் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் உள்ளதாக எச்சரிக்கை விடுத்தார். மறுநாளே தாக்குதல் நடந்தது. 'மேம்பட்ட பாதுகாப்பு பயிற்சி' என்று கூறினார்களே அப்படியிருக்கும்போது வெடிபொருட்கள் நிரம்பிய கார்குண்டு எப்படி நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்தது?

கேள்வி 2: தாக்குதல் நடந்து முடிந்து சிலநாட்களிலேயே இந்த தாக்குதலை ஜைஷே மொகமட் மற்றும் லஸ்க‌ர் இ தொ‌ய்பா திட்டமிட்டு நடத்தியுள்ளது என்று டெல்லி போலீஸின் சிறப்பு செல் கூறியது. இந்த தாக்குதலை தலைமை ஏற்று நடத்தியவர் மொகமட் என்பவர் என்றும் கூறியது. இவர் ஐ.சி.814 – விமானத்தை 1999ஆம் ஆண்டு கடத்தியவர் என்று கூறபட்டது. பிறகு இது சிபிஐ-யால் மறுக்கப்பட்டது. இவையெல்லாம் கோர்ட்டில் சாட்சி பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. டெல்லி ஸ்பெஷல் செல்லிற்கு என்ன ஆதாரம் இருந்தது?

கேள்வி 3: இந்த அனைத்து தாக்குதலும் சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது. நாடாளுமன்றத்தில் இந்த படங்களைக் காட்டவேண்டும் என்று கபில் சிபல் கோரிக்கை வைத்தார். இவரது கோரிக்கையை ராஜ்யசபா துணை சபாநாயகர் நஜ்மா ஹெப்துல்லா ஆதரித்தார். மேலும் இவர் இந்த சம்பவம் குறித்து பல குழப்பங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். காங்கிரஸ் கட்சியின் தலைமை கொறடா கூறும்போதுஇ 'நான் பார்த்தபோது காரிலிருந்து 6 பேர் இறங்கினர். 5 பேர்தான் கொல்லப்பட்டனர். சிசிடிவி 6 பேர் இருந்ததைக் காட்டியது' என்றார். தாஸ் முன்ஷி சரி என்றால் போலீஸ் ஏன் 5 பேர்தான் காரில் இருந்ததாக கூறவேண்டும்? யார் அந்த 6வது நபர்? அவர் எங்கே இப்போது? சிசிடிவி படங்களை அரசு தரப்பு சாட்சியமாக ஏன் கோர்ட்டில் போட்டுக் காட்டவில்லை? ஏன் அது பொதுமக்கள் பார்வைக்கு விடப்படவில்லை?

கேள்வி 4: இந்தக் கேள்விகள் எழுப்பப்பட்டபோது நாடாளுமன்றம் ஏன் ஒத்தி வைக்கப்பட்டது?

கேள்வி 5 : டிசம்பர் 13‌க்கு பிறகு சில நாட்கள் கழித்து பாகிஸ்தானின் தொடர்பிருப்பதாக சுமார் 5 லட்சம் ராணுவ வீரர்களை எல்லைக்கு அனுப்பினர். துணைக்கண்டம் அணு ஆயுதப் போருக்கு தயாரானது போல்தான் இருந்தது. அப்சல் குருவை சித்ரவதை செய்து வாங்கப்பட்ட வாக்குமூலம் தவிர முரண்பட முடியாத சாட்சியம் என்ன இருந்தது?

கேள்வி 6: டிசம்பர் 13இ நாடாளுமன்ற தாக்குதலுக்கு நீண்ட நாட்களுக்கு முன்பாகவே எல்லையில் ராணுவத்தினரை குவிக்கும் திட்டம் நடந்தேறியது என்பது உண்மைதானா?

கேள்வி 7 : சுமார் 1 ஆண்டு எல்லையில் இந்த ராணுவத்தினரின் இருப்புக்கு செலவழிக்கப்பட்ட தொகை எவ்வளவு? சரியாக கையாளத்தெரியாது வெடித்த கண்ணி வெடிகளினால் எவ்வளவு ராணுவத்தினர்இ பொது ஜனங்கள் உயிரிழந்தனர்? கிராமங்கள் வழியாக லாரிகளும்இ ராணுவத்தினரும் ரோந்தில் ஈடுபட்டதால் எவ்வளவு விவசாயிகள் தங்களது வீடுகளையும் விளை நிலங்களையும் இழந்தனர்? அவர்களது நிலங்களில் கண்ணி வெடிகள் வைக்கப்பட்டதா இல்லையா?

கேள்வி 8: எந்த ஒரு கிரிமினல் குற்ற விசாரணையிலும் ஒருவ‌ர் எப்படி குற்றவாளி என்று கண்டுபிடித்தோம் என்பதை போலீஸ் கோர்ட்டிற்கு விளக்குவது அவசியம். எப்படி மொகமது அப்சல் குருவை போலீஸ் பிடித்தது? ஸ்பெஷல் செல் கூறியது ‌கிலானி மூலம் அப்சலைப் பிடித்தோம் என்று. ஆனால் அப்சல் குருவை பிடிக்குமாறு ஜம்மு காஷ்மீர் போலீசுக்கு செய்தி அனுப்பப்பட்டது ‌கிலானியை கைது செய்வதற்கு முன்பே! எப்படி ஸ்பெஷல் செல் அப்சல் குருவை இதில் குற்றவாளியாக சேர்த்தது?

கேள்வி 9 : அப்சல் குரு சரணடைந்த தீவிரவாதி. இவர் தொடர்ச்சியாக பாதுகாப்பு படையினருடன் தொடர்பில் இருந்துள்ளார்இ குறிப்பாக சிறப்பு அதிரடிப்படையினருடன் இவர் அடிக்கடி தொடர்பில் இருந்துள்ளார் என்பதை கோர்ட்டுகளே ஒப்புக் கொண்டுள்ளது. இவ்வாறு அவர்களது கண்காணிப்பின் கீழ் இருந்த அப்சல் குரு எப்படி இவ்வளவு பெரிய சதித் திட்டத்தை தீட்டினார்?

கேள்வி 10: சிறப்பு அதிரடி படையின் சித்ரவதைக்கூடத்தில் சிக்கியஇ அவர்களுடன் அடிக்கடி தொடர்புடையஇ அவர்களது கண்காணிப்பின் கீழ் உள்ள அப்சல் குருவை வைத்து ல‌ஷ்ய‌ர் இ தொ‌ய்பாஇ ஜைஷீ அமைப்புகள் தாக்குதலை திட்டமிட்டிருக்க முடியுமா?

கேள்வி 11: அப்சல் குரு கோர்ட்டில் கூறும்போதுஇ அப்சல் குருவை மொகமட் என்பவருக்கு அறிமுகம் செய்தவர் டாரிக் அவர்தான் மொகமடை டெல்லிக்கு அழைத்து செல்லக் கூறினார் என்றார். தாரிக் அதிரடிப்படையில் வேலை செய்பவர். போலீஸ் குற்றப்பத்திரிக்கையில் தாரிக் இருக்கிறார். ஆனால் அவர் எங்கே?

கேள்வி 12: டிசம்பர் 19இ 2001-இல் தானே போலீஸ் கமிஷனர் எஸ்.எம். ஷங்கரிஇ நாடாளுமன்ற தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் மொகமது யாசின் படே மொகமட் என்றும்இ இவர் லஸ்கரைச் சேர்ந்தவர் என்றும்இ அவர் 2000 ஆம் ஆண்டே மும்பையில் கைது செய்யப்பட்டார் என்றும் இவரை உடனடியாக ஜம்மு போலீசிடம் ஒப்படைத்ததாகவும் கூறினார். இவர் கூறுவது உண்மையெனில் ஜம்மு காஷ்மீர் போலீஸ் காவலில் இருந்த ஒருவர் நாடாளுமன்ற தாக்குதலில் ஈடுபட்டுள்ளாரா? இது தவறு மொகமது யாசின் எங்கே?

கேள்வி 13: கொல்லப்பட்ட 5 பயங்கரவாதிகள் யார் யார்? ஏன் இன்று வரை நமக்கு அது பற்றி கூறப்படவில்லை?

திங்கள், 4 பிப்ரவரி, 2013

சமர்


நுதன உலகின் தொழில்நுற்ப மாற்றங்களின் ஒர் அம்சமாக தற்கலத்தில் கெமரா கண்கானிப்பு என்பது மேற்கு உலக நாட்டவரது இயல்பு வாழ்க்கையில் ஒரு பகுதியாகவிட்டது 9-11 தாக்குதலுக்கு பின் நியுயார்க் லன்டன் பாரிஸ் போன்ற நகரங்கள் 24 மணி நேர கெமரா கண்கானிப்பின் கீழ் இருப்பதை தமது தனிநபர் உரிமைகள் மீதான வரம்பு மீறலாக பலரும் கருதினாலும் 2001 ம் ஆண்டு லண்டனில் அல் கொய்தா தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கையை முறியடித்ததில் இந்த கெமரா கண்கானிப்பிற்கு முக்கிய பங்கிருந்தது
சமகால சமூக கலாச்சார அரசியல் மாற்றங்களை உடனடியாகவே தமது படைப்புகளுக்குள் கொண்டு வந்து விடும் மேற்கத்தைய சினிமாக்காரர்கள் இந்த கெமரா கண்கானிப்பினை மையப்படுத்தி பல திரைப்படங்களை உருவாக்கினர் இவற்றில் முக்கியமாக டென்சில் வாசிங்டன் நடித்த டெஜாவு ஜிம் கெரி நடித்த ட்ரூமன் ஷோ போன்ற திரைப்படங்களை குறிப்பிடலாம் அத்தோடு இந்த 24 மணி நேர கண்கானிப்பு என்பதை அடிப்படையாக கொண்டு தொலைக்காட்சிகள் றியாலிட்டி சோக்களையும் தயாரிக்க ஆரம்பித்தனர் முக்கியமாக சீபிஎஸ் தொலைக் காட்சியின் பிக்பிறதர் செவைய்வர் மற்றும் அமேய்சிங் ரேஸ் போன்ற றியாலிட்டி சோக்கள் இந்த 24 மணி நேர கணகானிப்பை அடிப்படையாக கொண்டு விருத்தி செய்யப்ப்டுள்ள போட்டி நிகள்ச்சிகலாகும் இவை கண்கானிப்பின் அடுத்தகட்டமாக தமக்கு தேவையான நாடகத்தன்மையை உருவாக்க இயல்பான நிலையில் உள்ள தமது களத்தை இயல்பற்றதாக மற்றி நிகழ்ச்சியில் பங்களிப்பவர்களை மனோவியல் றீதியாகவும் பௌதீக றிதியாகவும் தொடர்ந்து அழுத்தத்துக்கு உள்ளாக்குவதன் மூலம் அவர்கள் தமது இயல்பு நிலையை இழந்து வரம்பு மீறி போகசெய்வது போட்டியின் வெற்றிக்காக அனைத்து விதமான மணித விழுமியங்களையும் இழக்க செய்வது போன்ற உத்திகளின் மூலம் தொலைக்காட்சிப் பார்வையாளர்களது உள்ளுக்குள் இருக்கும் அந்த பரிணாம வளர்ச்சியடையாத குகை மனிதனை மகிழ்விப்பதுதான் இப்படியான நிகழ்ச்சிகளது நோக்கம் அது வியாபார றீதியாகவும் வெற்றி பெற்றுள்ளன
இந்த 24 மணி நேர கண்கானிப்பு தொலைகாட்சி றியாலிட்டி சோக்கள் ஆகிய இரண்டையும் மையப்படுத்தி எதிர்கால உலகை களமாக கொண்டு எழுதப்பட்டுள்ள ஜப்பானிய கதையான ஹங்கர் கேம்ஸை மையப்படுத்தி கடந்த வருடம் ஹங்கர் கேம்ஸ் என்ற திரைப்படம் உருவானது மிக குரைந்த செலவில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் எதிர்பாராவிதமாக பெரும் வெற்றி பெற்றது

 

இந்த ஹங்கர் கேம்ஸ் திரைப்படத்தை பாத்துவிட்டு விஷால் திரிஷா நடிக்க சமர் என்ற தலைப்பில் ஒரு திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர் தொழில்நுட்பறீதியாக எந்தவித ஆய்வும் செய்யப்படாமல் ஏன் என்று விளங்காத காட்சிகள் தொடர் ஒன்றை வெறும் விஷாலினது அக்ஷன் மற்றும் திரிஷாவின் கிளமர் ஆகியவற்றை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட திரைப்படம். தகவல் தொழில்நுற்பம் வழர்ச்சியடைந்துள்ள இந்தக்காளத்தில் பார்வையாலர்களை இவ்வளவு குறைத்து மதிப்பிடுவது இயக்குனரது தவறே கதை தெரிவு திரைப்பட ரசிகர்களது அறிவுக்கூர்மையை புரிந்து கொள்ளாதது போன்ற தவறுகளை தொடர்ந்து செய்வதானது விஷாலை வெகுவிரைவில் மற்ற மொரு சிபிராஜ் அருன் விஜய் போன்ற காளாவதியான வாரிசு நடிகராக்கிவிடும் ஆகவே விஷல் உசார் ப்லீஸ் இப்படியான திரைப்படங்கள் எடுக்க திட்டமிடுபவர்கள் கொஞ்சம் ஆய்வு செய்யவும் ஹங்கர் கேம்சின் வெற்றிக்கான காரணம் புத்தகமாக வெளிவந்த இந்தக்கதை டீனேஜ்கள் மத்தியில் வெகு பிரபலம் அடைந்திருந்தது அதுவே திரைப்படம் வெளிவந்ததும் எதிர் பாராத வெற்றியை கொடுத்தது இது போன்ற கதை ஒன்றை நமது சமுகத்துக்காக எடுக்கும் போது நம்பகத்தன்மையை உருவாக்க செய்ய வேண்டிய லாஜிக்குள்ள திரைக்கதையை உருவாக்கவும். நாயகன் ஏன் தொடாந்து பேங்கொக்கை விட்டு இந்தியா போகாமல் இருக்கிரார் என்பதில் தொடங்கி அடுத்தடுத்து நடக்கும் ஒவ்வொரு திருப்பத்தின் போதும் திரிஷாவிடம் ஒடிப்போவதைத்தவிர கொஞ்சமும் பொது அறிவை பயன்படுத்தாமல் இருப்பது போன்ற காடசிகள் தொடர்ச்சியாக வருவது ரசிகர்களை கேலி செய்வதாக இருக்கிரது மொத்தத்தில் சமர் உப்பிலாத சாம்பார்             

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

முகமது அலியும் கமல் ஹாசனும் ஐ வேவேயும் !!!




1967ம் ஆண்டு அதிபார பிரிவு குத்து சண்டை போட்டிகளில் உலக சம்பியன் ஆன முகமது அலி அவர் பிறந்த நாடான அமேரிக்க சட்டததின்படி கட்டாய இறாணுவ சேவையில் ஈடுபட அழைக்கப்ப்டார்.
 தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக உலக சம்பியன் பட்டத்தை வென்றிருந்த அலி அன்றய திகதியில் உலகின் மிகச்சிறந்த விளையாட்டு வீரனாக இருந்தார் அமேரிக்க கறுப்பர் இனத்வரான அலியின் இயற் பெயர் கசியஸ் கிளே !
அக்காலத்தில் கறுப்பினத்தவரது விடுதலை போராட்டத்தின் ஒரு முகமாக "ஹிலாஜி முகமது" " மல்கம் X" போன்றவர்களது தலைமையில் இயங்கிய அமேரிக்க கறுப்பு முஸ்லீம்கள் அமைப்பில் இணைந்து இஸ்லாமிய மதத்தை தளுவினார் "மாட்டின் லூத்தர்கிங்" தலைமையில் நடந்து வந்த கிறிஸ்த்துவ கறுப்பர்களுடன் ஒப்பிடுகையில் "மல்கம் X"  "முகமது அலி" போன்றவர்கள் மிகவும் வேகம் உள்ளவர்களாகவும் அதிகம் கவணிக்கப் படுபவர்ளாகவும் இருந்தனர் ஆட்சியில் இருந்த அரசுக்கும் வெள்ளையருக்கும் அவர்களது பேச்சுக்கள், நடவடிக்கைகள், மூலம் மிகக்கடுமையான அழுத்தத்தை கொடுத்துவந்தனர்! "அமேரிக்க மத்திய உளவு எஜன்சி" உற்பட அனைத்து வகையான அரச இயந்திரங்களும் இவர்களை அடக்க அல்லது முடிவாக அகற்றிவிட முடக்கி விடப்பட்டிருந்தன
இதே காலத்தில் அமெரிக்கா வியட்நாமில் ஹோ சி மிங் தலைமையிலான வியட்கொம்களுக்கு எதிரான முலுமையான போரில் ஈடுபட்டிருந்தது, அப்போது தான் உள்நாட்டில் தமக்கிருந்த ஒரு தலைவலியை நீக்க போரை பயன்படுத்திவிட தீர்மானித்தனர்!


முகமது அலியை தனது நாட்டுக்காக போராட வருமாறு அழைக்கபட்டது அப்போது தனது இருபதுகளில் இருந்த உலகசம்பியனான அலிக்கு இழப்பதற்கு நிறையவே இருந்தது அனைவரதும் கவணம் அவர்மீது திரும்பியிருந்த நேரம் அலி இறாணுவ சேவையில் இணையப்போவதில்லை என்ற கதை பரவியிருந்த நிலையில் ஆட் சேர்ப்புக்காக அழைக்கப்பட்ட தினத்தில் டெக்ஸ்டாஸ் ஹஸ்டன் நகர தபாலக கட்டத்திற்கு வந்த ஊடகங்களின் கேள்விகளுக்கு பதில் கொடுக்காமல் உள்லே சென்ற அவர் மூடிய கதவுகளுக்கு பின்னால் தனது பதிலை தெரிவித்து விட்டு வெளியே வரும் போது ஊடகவியலாலர்கள் கேள்வி எழுப்பினர் பிறந்த நாட்டுக்காக போருக்கு போக ஏன் மறுக்கிறீகள்? " நான் சாக வேண்டுமானால் இங்கு சாவேன் போராட வேண்டுமானால் இங்கு போராடுவேன் என் எதிரிகள் நீங்கள் வெள்ளையர்கள் எங்கோ ஒரு நாட்டில் இருக்கும் வியட்நாமியனோ சீனாக்காரனோ அல்லது தோல் நிறம் வெள்ளையில்லாத மனிதர்களை கொலை செயவதற்கு போக மறுக்கிறேன் எங்கோ ஒரு நாட்டில் உள்ள ஏழை மக்களை வசதியுடைய பலம்வாய்ந்த அமேரிக்காவுக்காக கொலை செய்ய நான் போகப்போவதில்லை அவர்கள் என் மூதாதையரை அடிமை படுத்தவோ மிருகம்போல் நடத்தவோ இல்லை அவர்களுக்கு எதிராக யுத்தம் செய்யப் போக மறுக்கிறேன் அதற்காக என்னை சிறையிலிடுவதானால் இடட்டும்!"

 அலியின் இந்த முடிவை அடுத்து அவர் வென்ற உலக சம்பியன் பட்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டன அவரது குத்து சன்டை போட்டிகளுக்கான அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்பட்டது அலி கைது செய்யப்பட்டார் குத்து சண்டை வலயத்தினுல் எவராளும் விழுத்த முடியாதிருந்த அந்த வீரனை! அவரது விளையாட்டுத்திறனின் உச்ச கட்டத்தில் இருந்த போது அரசியல் சூழ்ச்சிகளால் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு களத்தைவிட்டு அகற்றினர் . இந்த நிலையில் அலி சொன்னார் நான் இழப்பவை அதிகம்தான்! ஆனால் என் முடிவு இறுதியானது அதன் நியாயங்களை வரலாறு சொல்லும்!!!
ஐ வேவே 2008 ம் ஆண்டு மாவோகண்ட மக்கள் சீனா நடத்திய ஒலிம்பிக் போட்டிகள் நடை பெற்ற அரங்கத்தை நிர்மானிப்பதில் பெரும் பங்கு வகித்தவர் கட்டிடக் கலைஞ்ஞர் மெய்யியலாலர் சமூக ஆர்வலர் இப்படி பல பெயர்களை சொல்லிக்கொண்டே போகலாம் அல்லது ஓரே வார்த்தையில் கலைஞ்ஞன் என்றும் சொல்லலாம்,


தற்கால சீனாவைப்பற்றி சொல்வதானால் அமேரிக்கா உலகிற்கு நடந்து விட்ட சாபம் என்றாள் சீனாவோ நடக்கவிருக்கும் பயங்கரம்! மையப்படுத்தப்பட்ட அரசியல் அதிகார முறை ஒன்றின் கீழ் மனிதத்துவம் சமுதாய பொறுப்புகள் எதையுமே கணக்கில் எடுக்காமல் நவீன உலகின் முதலாம் இலக்க முதலாலியாய் வருவதற்காக அரக்கத்தனமாக இயங்கி கொண்டிருக்கும் இயந்திரம் அந்த அமைப்பிற்குள் ஒரு அணும் பெண்னும் கலவிகொணடு பிள்ளை பெறுவது முதல் ஒரு கலைப்படைப்பை வெளியிடுவது வரை ஆண்டு கொணடிருக்கும் கமியுனிஸ்ட் கட்சியின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் தான் செய்யப்பட வேணடும்!
சீனாவின் சிங்சாங் பிராந்தியத்தில் இடம் பெற்ற நில நடுக்கத்தின் பின்னரான சீன அரசின் ஊலல்கள் மூடி மறைப்புக்கள் முக்கியமாக "சிங்சாங்கின் டுபூ ஸஹின்" பாடசாலை அழிந்த விவகாரம் போன்ற சீன அரசு உலகத்திடமிருந்து மறைக்கும் விடயங்களை வெளிகொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டதன் விளைவு சிறையில் அடைக்கப்பட்டார் அவருக்கு எதிராக சாட்டப்பட்ட குற்றச்சாட்டு வரி ஏய்ப்பு சில காலம் சிறையில் இருந்த ஐ வேவே பின்னர் ஏற்பட்ட சர்வதேச எதிர்ப்புகளை தவிர்க்கும் வகையில் விடுதலை செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் ஆனால் சீன அரசாங்கத்தினது எந்த விதமான அழுத்தங்களுக்கு முன்னாளும் அவரது கலைப்படைப்புகள் சிரம் தாழ்த்தவில்லை!

கமல் ஹசன் தமிழ் சினிமாவின் உலக நாயகன்! தமிழ் சினிமாவிற்குள் நவீன தொலில்நுற்பத்தை கொண்டுவந்ததில் பெரும் பங்களிப்பு செய்தவர், சிறுவர்களாய் இருந்த நாம் இளைஞ்ஞர்களானபோது எமக்குள் இருந்த சமுதாய கோபத்தை அர்த்தப்படுத்தியது அவர் நடித்த சத்தியா, அந்த வேகம் தணிந்து ஆனாள் ஏக்கம் தீராமல் இருந்த போது பல யதார்த்தங்களை சொன்னது கமல் நடித்த அன்பே சிவம்!

கமலது விஸ்வரூபம் தொடர்பில் நிறையவே பேசியாகிவிட்டது அந்த திரைப்படத்திற்கு ஏற்பட்ட சிக்கல்களுக்கு காரணம் அரசியல் என்பது தெளிவு, அது ஜெயலலிதாவினுடையதா? அல்லது தனியே மதவாத அமைப்புகளினது அரசியலா? அல்லது வேறு ஏதாவது ஒரு தரப்பா ?என்பதை வரலாறு எமக்கு சொல்லும்

ஆனால் அதுவல்ல இப்போது எமக்கிருக்கும் வருத்தம் சமரசம் என்ற பெயரில் கமல் தமிழ் சினிமாவின் சவப்பெட்டியின் முதல் ஆணியை அடித்திருக்கிறார் என்பதுதான் !!!
ஒரு தணிக்கை குழு வைக்கப்பட்டு அதில் உள்ளவர்கள் குறிப்பிட்ட திரைப்படம் திரையிடப்பட தகுதியானது தான் என சான்றிதல் அளித்ததன் பின்னர், ஊருக்குள் இருக்கும் அனைத்து விதமான (சங்கங்கள்) (அரசியல் கட்சிகள்) (சாதியஅமைப்புகள்) என "ஆட்டொ காரர் சங்கம்முதல் தலிபான் தீவிரவாதிகள்வரை" அனைவரதும் ஆசிர்வாதத்துடன் தான் இனி வரும் ஒவ்வரு திரைப்படமும் வெளியிடப்பட வேணடியிருக்கும்! திரைப்படத்தின் பெயரில் ஆரம்பித்து ஒவ்வரு காட்சி, கதை வசனம் முதல் நாயகியின் இடை, தொடை வரை ஒவ்வொன்றுக்கும் எதிராக வழக்கு தொடரவும் அரசிடம் மனு கொடுக்கவும் போதுமானளவு "ஜந்துக்களும்" அவற்றை நியாயப்படுத்த சோ போன்ற அதி புத்திசாலிகளும் இருக்கின்றனர் ஆகவே இனி தமிழ் சினிமா எடுக்கப்போகும் அனைவருக்கும் சொல்லிக் கொள்வது என்ன வென்றாள் ((ஸாரி சார் ஆப்பு ஏற்கனவே வைக்கப்பட்டு விட்டது போய் அமர்வது உங்கள் விருப்பம்))
முகமது அலிக்கும் ஐ வேவேயுக்கும் இருந்த முதுகெலும்பு உலகநாயகனுக்கு இல்லாமல் போனது தமிழர்களது துர்பாக்கியமே!


பிற்குறிப்பு (கலைஞ்ஞர்கள் சமரசம் செய்து கொள்வதில்லை கம்பனும் பாரதியும் கன்னதாசனும் சமரசம் செய்து கொண்டிருந்தாள் எமது இலக்கியங்கள் அன்றே இறந்திருக்கும்)

சனி, 2 பிப்ரவரி, 2013

கும்கி வெற்றியும் தோல்வியும்



இயக்குனர் பிரபு சாலமன் தமிழ் சினிமா மரபுகளை ஒதுக்கிவிட்டு நமக்கு பறீட்சியம் இல்லாத களத்தில் வழக்கமான வில்லனும் கதாநாயகனும் சண்டை போடும் காட்சிகளோ எந்த வித லாஜிக்கும் இல்லாத காட்சிகளோ இல்லாமல் கும்கி படத்தை உருவாக்கியிருக்கிரார்.
மலை வாசிகள், அவர்களது வாழ்வியல் யதார்த்தங்கள், ஏன் யானைகள் போன்ற அனைத்து விதமான கதையம்சங்களிலும் அவர் செய்திருக்கும் ஆய்வின் சிறப்பை காணமுடிகிரது! காங்கிறீட் வனாந்தரங்களுக்கு அப்பால் பச்சை பசேலாகத் தெரியும் கதைக்களம் மனதுக்கு இதமாக இருக்கிரது இயற்கையையும் கிராமததையும் இப்படியும் காட்டலாம் என்பதை சொல்கிரது ஒளிப்பதிவு, டி இமானின் இசை ஆஹா ஒஹோ என்னும் அளவுக்கு இல்லை என்றாளும் கதையின் ஒட்டத்தோடு ஒன்றுகிரது.
சிவாஜி குடும்பத்தின் வாரிசு படமாக கும்கியை பார்க்க போனால் எமக்கு கிடைப்பது ஏமாற்றம் தான்! நாயகன் விக்ரம் பிரபு படம் முலுதும் எந்தவித முகபாவமும் இல்லாமல் இருப்பது ஒரு இயக்குனராய் பிரபு சாலமனை தோற்கச்செய்திருக்கிறது இதே பாத்திரத்தில் அவரது முதல் பட நாயகன் விதார்த் நடித்திருந்தால் படத்தின் தரமே வேறாக இருந்திருக்கும் சிவாஜி பிரபு குடும்பத்தின் வாரிசு என்ற பெரும் சுமையை தலைமேல் வைக்கப்பட்டிருக்கும் விக்ரம் பிரபு நிறையவே பயிற்சி எடுக்க வேண்டியிருக்கிரது
கதாநாயகனிடம் எதை எல்லாம் கோட்டை விட்டாரோ இயக்குனர் அதையெல்லாம் ஒரு படி மேலாகவே பெற்றுக் கொண்டிருக்கிரார் தம்பி ராமையாவிடம் படத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை அசத்தியிருக்கிரார் மனிதர் படத்தின் ஒவ்வரு காட்சியும் தொய்வி;ன்றி நகர்வதற்கான காரணம் தம்பி ராமையாவின் கதாபாத்திரமே! நமது இயக்குனர்கள் அவரை சரியாக பயன்படுத்தினாள் தமிழ் சினிமாவின் றாபின் வில்லியம்ஸ் அவர்தான்
மொத்தத்தில் கதையிலும் களத் தெரிவிலும் வென்ற இயக்குனர் பிரபு சாலமன் நாயகனை இயக்குவதில் தோற்றிருக்கிரார் 

வியாழன், 31 ஜனவரி, 2013

விஸ்வரூபமும் டிம்பக்டூவும்

நாம் எல்லாம் விஸ்வரூபத்தின் தடைபற்றி வாதிட்டுக் கொண்டிருக்கும் போது ஆபிரிக்காவின் மாளி நாட்டில் டிம்பக்டூ நகரில் அமைந்திருந்த அஹமத் பாபா நூலகத்திணை  தீயிட்டு எரித்துவிட்டனர் இந்த நூலகத்தில் 13ம் நூறாண்டு மற்றும் 14ம் 16ம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட ஆபிரிக்க இஸ்லாமிய வாலாற்று ஆவனங்கள் குர்-ஆன்கள் என பல பெறுமதிமிக் 2000 க்கும் அதிகமான அவனங்கள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன இந்த ஆவனங்களின் முக்கியத்துவம் என்னவென்றாள் மேற்கத்தையரது வருகைக்கு முன்னரான ஆபிரிக்க இஸ்லாமியர்கள் பற்றிய வரலாற்று பதிவுகளில் மேற்கத்தைய கிறிஸ்துவ ஆக்கிரமிப்பாளர்கள் அழித்தவை போக எஞ்சியிருந்த மிகச்சில ஆவனங்களை அஹமத் பாபா நூலகத்தில் பாதுகாத்து வைத்திருந்தனர்
மாளி நாட்டில் அரசுக்கு எதிராக போராடிவரும் இஸ்லாமிய கிளர்ச்சியாலர்கள் கடந்த 10 மாதங்களாகளாக டிம்பக்டூ உட்பட பல மாளிய நகரங்களை ஷரியா சட்டத்தின்கீழ் ஆட்சி செய்துவந்தனர் இந்த வாரம் மாளியின் முன்னாள் ஆட்சியாலாகளான பிரெஞ்சுப்படைகள் மாளிய அரசாங்கத்தின் உதவிக்கு வந்து கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக இறானுவ நடவடிக்கைகளை நடத்த தமது கட்டுப்பாட்டுக்குள் இருந்த பிரதேசங்களை விட்டு வெளியேறிய கிழர்ச்சியாலர்கள் டிம்பக்டூவை விட்டு வெளியேறும் முன் அவர்களது புனித நூலான திரு குர்-ஆன் மற்றும்  பல நூற்றாண்டு களாக பாதுகாக்கப்பட்டு வந்த  இஸ்லாமியர் வறளாற்றில் முக்கிய பதிவுகளை கொண்ட ஆவனங்களையும் தன்னகத்தே கொண்ட அஹமத் பாபா நூலகத்தினை தீயிட்டு எரித்துள்ளனர்
 
இதற்கிடையே தமிழ் நாட்டில் விஸ்வரூபம் திரைப்படம் தடை செய்யப்பட்டு தடை நீக்கப்பட்டு மீண்டும் தடை செய்யப்பட்டு மீண்டும்...! அட போங்கைய்யா போறதுக்கு காட்டுத் தனத்துக்கும் கேனைத்தனத்துக்கும் கோமாளித்தனத்துக்கும் ஒரு அளவில்லையா?
இங்கே ஒரு திரைப்படத்தில் திரு குர்-ஆன் பயங்கரவாதிகளின் கை நூளாக காட்டப்பட்டிருப்பதாக கொதிக்கும் மதவாதிகள் அங்கே முகமது நபி வாழ்ந்து இருநூறு ஆண்டுகளில் எழுதப்பட்ட வறளாற்று நுல்கள் அதே திரு குர்-ஆன் ஆகியவை எரிக்கப்பட்டுள்ளன அதைப்பற்றி ஒரு மூச்சும் விடவில்லை காரணம் எரித்த பயங்கரவாதிகளும் இஸ்லாமிய போராலிகள் என்பதாளா? ஆல்லது இந்தப்பயங்கரவாத அமைப்புகளுக்கு வேண்டிய பணமும் ஆயுதங்களும் கொடுப்பது அரேபியர்கள் என்பதாளா? ஆல்லது ஆபிரிக்க கருப்பர்கள் எதை எரித்தாள் என்ன நமக்கு முக்கியம் நம் அம்மாவின் அரசியல் என்பதாளா?

என்னவோங்க டிம்பக்டூவில் நடந்த கொடுரத்தை நாம் எதிர்க்கிறோம் மத நூல்களை எரித்ததற்காக அல்ல மனித வரளாற்றில் முக்கிய காலகட்டம் ஒன்று தொடர்பாக எமக்கிருந்த பதிவுகளை அழித்தமைக்காக
எம்மை பொருத்தவரை நூலகத்தை எரித்தவர்களுக்கும் இங்கு திரைப்படத்தை எதிர்ப்பவர்களுக்கும் இடையில் அவ்வளவு வித்தியாசம் தெரியவில்லை     

புதன், 30 ஜனவரி, 2013

மறுதளிப்பு



  அத்தருணத்தில் பேதுரு வெளியே வந்து அரமனை முற்றத்தில் உட்கார்ந்திருந்தான். அப்பொழுது, வேலைக்காரி ஒருத்தி அவனிடத்தில் வந்துஷ நீயும் கலிலேயனாகிய இயேசுவோடேகூட இருந்தாய் என்றாள். அதற்கு அவன் நீ சொல்லுகிறது எனக்குத் தெரியாது என்று, எல்லாருக்கும் முன்பாக மறுதலித்தான். அவன், வாசல் மண்டபத்திற்குப் போனபொழுது வேறொருத்தி அவனைக் கண்டுஷ இவனும் நசரேயனாகிய இயேசுவோடேகூட இருந்தான்... என்று அங்கே இருந்தவர்களுக்குச் சொன்னாள். அவனோ அந்த மனுஷனை நான் அறியேன் என்று ஆணையிட்டு, மறுபடியும் மறுதலித்தான். சற்றுநேரத்துக்குப்பின்பு அங்கே நின்றவர்கள் பேதுருவினிடத்தில் வந்துஷ மெய்யாகவே நீயும் அவர்களில் ஒருவன், உன் பேச்சு உன்னை வெளிப்படுத்துகிறது என்றார்கள். அப்பொழுது அவன்ஷ அந்த மனுஷனை அறியேன் என்று சொல்லி, சபிக்கவும் சத்தியம்பண்ணவும் தொடங்கினான். உடனே சேவல் கூவிற்று அப்போது தேவகுமாரன் சேவல் கூவுவதற்கு முன் நீ என்னை மறுதளிப்பாய் எனக்கூறியதை நினைத்து மனமுடைந்தான்

இது நடந்து 2000 ம் ஆண்டுகளுக்குப் பின் ஒரு ஒக்டோபர் மாதம் 26 ம் திகதியில் அதிகாலை சேவல் கூவும் சத்தத்துடன் எழுந்த அவன் அறையில் படுத்திருந்த மற்றவர்களின் தூக்கம் கலையாதவாறு வெளியேவந்து ஒரு கோள்ட்லீப்பை பற்றவைத்துக்கொண்டான் பனி படர்ந்த மலையகத்தின் அதிகாலை அழகாகத்தெரிந்தது தூரத்தில் தெரிந்த பூனாகலை மலைத்தொடரை உற்றுப்பார்த்துக்கொன்டிருந்த அவன் பதுளை றோட்டில் பொகும் வாகனங்களின் சத்தத்தாள் தனது கவனத்தை அந்நதப்பக்கமாக திருப்பினான் 5.50 செல்லும் மாத்தறை பஸ்சை பாத்த அவன் ஆறு மணியாகுது என முனு முனுத்தான்.

அவன் குளித்து முடித்துவிட்டு அறைக்குள் வரும்போது யோகா சுவாமி கும்பிட்டுக் கொண்டிருந்தான் சக்தி டிவியில் திருமகள் செய்தி வாசித்துக் கொண்டிருந்தாள் தனது உடைகளை அயன் பன்னிக்கொணடிருந்த ரவி 'கிளாஸ் முடிஞ்சு படத்துக்கு போவமா? றீகல்ல புதுப் படம் போட்டிருக்கிறான்' என்றான் அவன் தனது டெனிம் காட்சட்டையை உதறியவாறே என்ன படம்? என்று கேட்க 'பேர் ஞாபகம் இல்ல அடல்ஸ் ஒன்லீன்னு போட்டிருந்தான்' என்று கூறிய ரவி தன் சப்பாத்துக்களை பொலிஸ் பண்ணத் தொடங்கினான்இ டிவிக்கு முன்னால் உட்கார்ந்து கெரம் விளையாடிக்கொண்டிருந்த சசியும் பிரபாவும் ஏதோ அவனது அனுமதிக்காக காத்திருப்பது பொள் அவனை உற்றுப்பார்த்தனர்' அவனோ எந்தவித உனர்வுமின்றி சரி போவம்' என்றான் உடனே சசி '6..30 க்கு போவம் 2.00 மணிக்கு சரக்குக்கு வாரதா சொல்லியிருக்கிறன்' என்றான் 'நீங்க அங்க போக அவ்வளவு நேரம் நாங்க என்ன மயிர புடுங்கிரதா?' என்று பிரபா கொபமாக கேட்க
'லைப்ரறிக்கு போ படிக்கத்தானே வந்திருக்கிறீங்க போய்படி' என்று நக்கலாக சொன்ன சசி கெரம் போர்ட்டை விட்டு எழுந்து குளிக்கப் புறப்பட்டான்;.

அவர்கள் 5 பேரும் பண்டாரையின் கடையடிக்கு வரும்போது நேரம் 8 மணி ஆகியிருந்தது, பண்டா ரவளை நகருக்குள் எத்தனை கடைகள் இருந்தாலும் பண்டாரையின் கடைதான் அவர்களுக்குப் பத்தியர்hட்டது அது ஒரு ஹோட்டலோ சாப்பாட்டுக்கடையோ இல்லை என்றாலும் பலசரக்குக் கடையின் ஒரு மூலையில் ஒரு மேசையும் நான்கு கதிரைகளும் போடப்பட்டிருந்தன அருகில் உள்ள வீடொன்றில் தயாரிக்கப்படும் சிறிய இடியப்ப பார்சல்களும், அப்பமும், பாணும், பால் சொதியும், என அங்கிருக்கும் சாப்பாடு டவுன் ஹோட்டல்களை விட சுவையாக இருந்தது பண்டாறையின் மனைவி சுவர்னமாலியை 'கொஹொமத மாளி அக்கே?' எனக்கேட்டவாறு கடைக்குள் நுளைந்தனர். இடியப்பமும், பால் சொதியும் ஓடர் செய்துவிட்டு அவர்கள் போய் உட்கார ரவி மட்டும் கடைக்கு முன்னால் தொங்கவிடப்பட்டிருந்த வாழைக்குiலையிலிருந்து ஒரு பழத்தை பறித்துக் கொண்டே வழக்கமாக கடையில் நிற்கும் பண்டாரயை கானாததாள் 'கோ பண்டார அய்யா?' எனக்கேட்டவாறு சுவர்னமாலியுடன் கதைத்துக் கொன்டிருந்தான் அந்த வீட்டை அவர்கள் வாடகைக்கு எடுத்ததில் இருந்தே சுவர்னமாலி மீது ரவிக்கு ஒரு ஈடுபாடு இருந்தது அது படிப்படியாக வளர்ந்து இறுதியில் மாலிக்கும் ரவிமீது ஈடுகாடு வந்தது அது தொடர்கதையாகப் போய்க் கொண்டிருந்தாலும் பண்டார இருக்கும் போது இருவருமே அடக்கி வாசிப்பார்கள் இன்று சந்தர்ப்பம் நன்றாகவே அமைந்திருக்கின்றது!

அவர்கள் 5 பேரும் ஹரி வீடியோவுக்குள் நுளையும் போது ஏளெட்டுத் தலைகள் தென்பட்டன, பின் அறை வாசலில் நின்று 'விரகேசரி' பேப்பர் பார்த்துக் கொண்டிருந்த சிவா அண்ணை 'குட்மோனிங்' என்றார் பதிலுக்கு 'குட் மொனிங்' என்ற அவன் 'பேப்பரில என்ன இருக்கு?' என்றான் தலையை துர்க்கிப்பாhத்த சிவா அண்ணை 'எழுத்து இருக்கு என்றார்' 'அந்த பு...... எங்களுக்கும் தெரியும்! என்ன செய்தி இருக்கு?' என்றான் 'எரிக் சோல்கைம் வாராராம், சந்திரிக்காவுக்கும் கெபினட்டுக்கும் இடையில திருப்பியும் பிரச்சினையாம்' என்றான் சிவா

எல்லொரும் இருந்த நாலு சிகரட்டையும் இழுத்துவிட்டு, அரட்டை அடித்துக் கொண்டிருந்த போது கீழ் கடையில் வேலை செய்யும் குமார் அவசர அவசரமாக கடைக்குள் வந்து 'பிந்துனுவேவாவிலை பிரச்சினையாம் பொலிஸ் ஆமி வாகனம் எல்லாம் பறக்குது!' என்றான் 'என்ன பிரச்சினை?' என்று சிவா அண்ணை கேட்க 'தெரியாது முதலாளியை கேட்டுப்பாருங்க?' என்றவாறு மீண்டும் வெளியே ஒடினான் அவனைத் தொடர்ந்து வெளியே போன சிவா அண்ணை பத்துநிமிடம் கழித்து வரும்போது சிவத்துப்போயிருந்தார்! 'காம்பிலை இருக்கிர பொடியல் காவலுக்கு இருந்த பொலிசையும் அடிச்சு போட்டு ஊருக்க போயி அட்டாக் பனுறாங்களாம்!' என்ற போது அவர்கள் திகைத்துப் போனார்கள், பிந்துனுவௌh புனருத்தாரண முகாமானது 1987, 88 களில் கிளர்ச்சியில் ஈடுபட்ட ஜே வி பி உறுப்பினர்களை தடுத்து வைத்து புனருத்தாரணம் செய்வதற்கென இழைஞ்ஞர் சேவைகள் சபையினாலும், புனருததாரன அமைச்சு, மற்றும் பாதுகாப்பு அமைச்சு என்பவற்றாள் உருவாக்கப்பட்டது ஜே வி பி காரர்கள் திருந்திய! பின் 'தமிழ் போராலி' அமைப்புகளில் இருந்து வெளியேறும் நபர்களை தடுத்துவைத்து புனருத்தாரனம் செய்வதற்க நடத்தப்பட்டுவந்தது. தற்போது அந்த முகாமில் 40 'தமிழர்கள் கைதிகளா, அல்லது முகாம் வாசிகளா, அல்லது முன்னாள் போராளிகளா, என்பதை புரிந்து கொள்ள முடியாத நிலையில் வசித்துவருகின்றனர்'

அந்த 40 பேரையும் இவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. அவர்களுக்கும், நகரத்தில் இருந்த இளைஞர் கழகங்களுக்கும் இடையில் கிறிக்கேட் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், இரவு முகாம்கள், என அவர்களை புனருத்தாரணம் செய்யும் திட்டத்தின் ஒரு பகுதியாக தொடர்ச்சியான நிகழ்ச்சிகள் நடை பெற்றன அங்கு செல்லும், ஏனைய இளைஞ்ஞர் கழகங்களைவிட இவர்களது கழகத்தினரும் முகாம் வாசிகளும் அதிக நெருக்கமானார்கள் காரனம். இவர்களும் தமிழ் அவர்களும் தமிழ் முகாம் வாசிகளை பொருத்தவரை தம்மை அடிக்கடி சந்திக்கும் உறவுகளாக இவர்கள்தான் இருந்தனர். இந்த உறவு வளர வாரஇறுதிகளில் கிரிக்கேட் விளையாடுவதும் அவர்கள் இவர்களுக்காக சமைப்பதும் வழக்கமகியிருந்தது

அவனைப்பார்த்த சிவா அண்ணை 'போய்பார்த்திட்டுவருவமா?' எனக்கேட்க தலையை ஆட்டிய அவன் யோகாவிடம் 'நீங்கள் கிளாசுக்கு போங்க நான் சிவா அண்ணையோட போய் பார்த்திட்டு வாறன்' என்றான் சிவாவின் மொட்டாசைக்கில் பிந்துனுவௌ சந்தியை கடக்கும் போது அங்கே சனம் கூடியிருப்பதையும் பொலிஸ் வாகனங்கள் ஆங்காங்கே நிற்பாட்டப் பட்டிருப்பதையும் பார்த்த அவன் மேல போவம் என்றான். அந்த சிறிய மலைப்பாங்கான றோட்டில் சென்ற அவர்களது மோட்டார் சைக்கில் முகாமின் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் உள்ள றோட்டிற்கு சென்ற போது அதற்கு அப்பாள் போக முடியாத வாறு வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்பட்டிருப்பதை கண்டனர், மோட்டாசைக்கிலை நிற்பாட்டிய சிவாஅண்ணை 'இத இங்க விட ஏலாது நான் எங்கயாவது பாதுகாப்பான இடமாப்பாத்து விடடிட்டு வாறன் நீங்கள் நில்லுங்க' என்றார் சைக்கிளை வி;ட்டு இறங்கிய அவன் அந்த வாகனங்களுக்கூடாக நடந்தான் றோட்டைவிட்டு விலகிய அவன் கம்பிவேலிக்கூடாக புகுந்து முகாமின் வளவுக்குள் பிரவேசித்தான், பல ஏக்கர்களில் பரந்திருந்த முகாமின் மைதானததிற்கு இடப்பக்கமாக இருந்த குன்றின் மீது ஏறிய அவனுக்கு அந்த முகாமின் அனைத்துப்பகுதிகளும் தெரிந்தன அவன் நின்ற இடத்தில் பல நூற்றுக்கனக்கானவர்கள் நின்று வேடிக்கைப் பார்த்து கொணடிருந்தனர். அவனுக்கு அந்த முகாமின் மையப்பகுதி 'ஒரு கலைந்த எறும்புக் கூடு' போல் தெரிந்தது ஆயிரக்கணக்கானவர்கள் கத்திகள், பொல்லுகள், அலவாங்குகள், எனக் கையில் அகப்பட்டவற்றை எடுத்துக் கொண்டு அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தனர். முகாமின் பிரதான நுளைவாயில் பக்கமாக நூற்றுக்கனக்கான 'பொலிசார்' ஆயுதம் தரித்த வண்ணம் நின்று கொணடிருந்தனர். முகாமின் மையப்பகுதியில் பச்சை நிறத்திலான ஆறு கட்டங்கள் இருந்தன ஒவ்வன்றும், 150 அடி நீளமான மண்டபங்கள் வெளிப்புறமாக இருந்து பார்க்கும் போது இராணுவ முகாம்களில் உள்ள கட்டடங்களை நினைவு படுத்தின இவற்றுள் மூன்றாவது கட்டடத்தில் தான் முகாம் பொருப்பாளர் 'லெப்டினன் பண்டாரவின்' காரியாளயம் உள்ளது, ஏனைய மூன்றில் இளைஞர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர், மற்றயது சமையலறை மற்றும் களஞசிய அறைகளை கொண்டது, 6வது கட்டடம் சில நாட்களுக்கு முன்னர்தான் இளைஞர்களாளல் 'கோயிலாக' மாற்றப்பட்டு பராமறிக்கப்பட்டு வந்தது.
மலைக்குன்றின் மீது நின்று கொண்டிருந்த அவனுக்கு கிராமவாசிகளையும் பொலிசாரையும் 'தாக்கியதாக' கூறப்பட்ட இளைஞர்கள் எவரையும்' காணமுடியவில்லை! அவன் பொலிசாரை உற்றுப்பார்த்தான் அவர்கள் முழுமையாக தயார்நிலையில் நின்றனர்! என்ற போதும் எதற்காகவோ காத்திருந்தனர், அதே நேரம் முகாமுக்குள் நின்ற ஆயுததாரிகள் ஒரு கட்டடத்தை சூழ்ந்து கொண்டு அதன் கதவுகளையும் ஜன்னல்களையும் உடைக்க முயன்று கொன்டிருந்தனர், சில நிமிடப் போராட்டத்திற்குபின் ஒரு கதவு உடைக்கப்பட ஆயுததாரிகள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தவாறு கட்டடத்திற்குள் நுiளைய முயன்றனர், இதற்கிடையே திடீரென ஏனைய கதவுகளை திறந்து கொண்டு அந்த இளைஞர்கள் வெளியே ஒடிவந்தனர்! அவர்கள் ஒரு பத்தடிகள் ஒடுவதற்குள் ஆயுததாரிகள் கூட்டம்கூட்டமாக சூழ்ந்து கொண்டு தமது ஆயுதங்களால் தாக்க ஆரம்பித்தனர், வெளியே வந்த ஒவ்வரு இளைஞனையும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சூள்ந்து கொண்டு தாக்கிக்கொணடிருந்தனர், அலறல்களும் மரனஓலங்களையும் மீறி மகிழ்ச்சி ஆரவாரங்கள் ஒலித்தன, நடப்பவற்றை பார்த்துக்கொணடிருந்த அவன் அப்படியேகல்லாக நின்றான். இதற்கிடையே, தாக்குதலாளிகளின் கவனம் முதலில் வெளியே வந்தவர்கள் மீதிருக்க. சில இளைஞர்கள் தமது உயிரை பாதுகாத்துக் கொள்ளும் இறுதி முயற்சியாக பொலிசாரை நோக்கி ஓடினர் அவர்கள் பாதுகாப்புத் தேடி தம்மை நோக்கி ஒடிவருவதைக்கண்ட பொலிசார் திடீரென அவர்களை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்ய ஆரம்பித்தனர்! சூடுபட்டு விழுந்தவர்களை கொலையாளிகள் தாக்கி இழுத்துச் சென்றனர், துப்பாக்கிச் சூட்டிலிருந்தும் தப்பிய மூவர் பொலிசாரிடமும் தமக்கு பாதுகாப்பு இல்லை என்பதை உனர்ந்து பொலிஸ் வாகனங்கள் நின்ற திசையில் ஒடிச்சென்று அருகில் நிறுத்தப்பட்டிருந்த பொலிஸ் வண்டிக்குள் தாவி ஏறிக் கொணடனர், அரை நிமிடத்pற்குள் கொலையாளிகள் குழு ஒன்று வண்டியை சூழ்ந்து கொண்டாலும் வண்டியை தாக்கத் தயங்கினர் அவர்கள் கதவுகளை இழுத்துப்பார்த்தாலும் அவை இளைஞர்களாள் லொக் பண்ணப்பட்டிருந்தது நிலமையை 'புரிந்து கொண்ட' ஒரு பொலிஸ் அதிகாரி சைகை செய்ய கையில் திறப்பை வைத்திருந்த பொலிகாரர் கதவினை திறந்து விட்டார்! உடனே கொலையாளிகள் வகனத்தினுள்ளே ஏறி அவர்களை இழுத்துச் சென்றனர், இதற்கிடையே கொலையாளிகளால் கோவில் அமைந்த மண்டபத்திற்கு தீ மூட்டப்பட்டிருந்தது! அதனை தொடர்ந்து ஏனைய கட்டடங்களுக்கும் தீ வைக்கப்பட்டன, அதனைத் தொடர்ந்து தாக்கப்பட்டு குற்றுயிராக விழுந்து கிடந்தவர்களை ஒவ்வருவராக இழுத்துச்சென்று எரியும் 'நெருப்பில்' எறிந்தனர்! அப்போதும் 'பொலிசார்' பதற்றமடையாமல் பார்த்துக்கொண்டிருந்தனர்! கொலையாளிகள் சிறுகுழுக்களாக சென்று விழுந்து கிடந்த சடலங்களை புரட்டி உயிர் உள்ளதா எனப் பாhத்து மீண்டும் தாக்கினர், இவை அனைத்தும் ஒரு பதினைந்து நிமிடங்களுக்குள் நடந்து முடிந்தன. அவன் சிலையாக நின்றான் அடுத்து என்ன நடக்கும் என்பதை அவனால் சிந்திக்க முடியவில்லை, இருதினங்களுக்கு முன், கடந்த சனிக்கிழமை உணவு சமைத்து, தமக்கு பரிமாறிய ஒவ்வரு இளைஞனும் கொலை செய்யப்படுவதை பார்த்துக் கொன்டிருந்தான். அப்போது அவன் அருகில் நின்று கொணடிருந்த கூட்டத்தில் இருந்து 'ஒருவன்' அவனைப்பார்த்து 'தமுசெ தெமள நேத (நீ தமிழ் தானே)' 'உன்னை அவர்களுடன் பாhத்திருக்கிறேன்' என்றான் அவன் அவசரமாக 'நெ நெ' இல்லை இல்லை நான் தமழ் இல்லை என மறுதலித்தான்! இதற்கிடையே பொலிசார் வானத்தை நோக்கி சுட அனைவரது கவனமும் அந்தப்பக்கம் திரும்பியது, அவன் அந்த இடத்திலிருந்து நழுவினான.;

நாற்காலியில் அமர்ந்திருந்த அவன் நடுங்கிக் கொண்டிருந்தான், உள்ளுக்குள் லேசாக காய்ச்சல் காய்ந்து கொண்டிருந்தது 'ரூபவாகினி செய்திகள்' 'பயங்கரவாதிகளுக்கும்' பிந்துனு வேவா கிராமவாசிகளுக்கும் இடையில் நடை பெற்றமோதலில், முகாமில் இருந்த 'பயங்கரவாதிகளுள்' 27 பேர் கொல்லப்பட்டதாகவும். ஏனையவர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் 'அப்பாவி' கிராமவாசிகள் எவரும் கொல்லப்படவோ காயப்படவோ இல்லை எனவும் தெரிவித்தது, அவனுக்கு தலை சுற்றுவது போல் இருந்தது அன்று காலையில் சாப்பிட்ட இடியப்பத்தை தவிர, அன்றைய நாலுக்கு அவன் எதுவுமே சாப்பிட்டிருக்கவில்லை பயம் அதிர்ச்சி தடுமாற்றம் போன்ற எல்லா உணர்வுகளும் ஒன்று சேர்ந்து ஒரு விதமான பசியை உண்டுபண்ணியது. 'ஏதாவது சப்பிடுவமா?' என யோகாவைப் பார்த்து கேட்டான் 'இப்ப 7 மணி டவுணுக்கு போக ஏலாது பக்கத்துகடையில் பாண் வாங்குவம்' என்று சொன்ன ரவி 'நான் பொயிட்டுவாரன்' என எழுந்தான், அவன் என்ன நினைத்தானோ 'இல்ல எல்லாரும் போவம்' என்றான், கடையை நொக்கி நடந்து கொண்டிருந்த அவர்களிடையே வளக்கமான பகிடிகளையோ தூசணங்களையோ காணமுடியவில்லை, மௌனம்தான் ஓங்கிநின்றது பண்டாரவின் கடைவாசலுக்கு வந்த அவர்கள் வெளியே நிற்க, உள்ளே சென்ற ரவி 'பாண் தெக்கய் பண்டார அய்யெ' என்று காசை நீட்ட வளக்கமாக வாய் நிறைய பல்லாய் அவர்களை பார்த்துச் சிரிக்கும் பண்டார முகத்தை இறுக்கமாகவைத்துக் கொண்டு 'பாண் நெ' என்றான் அவனுக்குப்பின்னால் இருந்த கண்னாடிப்பெட்டிக்குள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பாணை பார்த்துக் கொண்டே 'விளையாட வேண்டாம் பண்டார அய்யே' என்றான் ரவி. 'நான் இப்ப உனக்கு ஒரு முறை சொன்ன நான் தானே பாண் இல்லை என பண்டார உரத்துச் சொன்னான்

சத்தம் கேட்டு மற்றயவர்களுடன் அவன் கடைக்குள்ளே சென்று கொண்டே யோசித்தான் சில இரவுகளில் வெளியே செல்லும் ரவி மாலியைப் பார்க்கத்தான் போகிறான் என்பது அவனுக்கு தெரியும், ஆனாள் அது பண்டாரவுக்கு தெரிய எந்தவித வாய்ப்பும் இல்லை என்றுதான் ரவி சொன்னான் ஆனாள் பல நாள் திருடன் இன்று அகப்பட்டு விட்டான் போல இருக்கிறது என்று நினைத்த அவன், பண்டாரவினைப் பார்த்து சிரித்தவாறே 'என்ன பண்டார அய்யெ என்ன பிரச்சினை? ' என்றான் சிரிக்காத பண்டார தெமழுண்ட தென்ட மெஹெ பாங் நே! (தமிழர்களுக்கு கொடுக்க எங்களிடம் பாண் இல்லை!) என்று உறுதியாகச் சொன்னான்.

அவர்கள் எல்லோரும் எப்படி அந்தக்கடையை விட்டு வெளியே வந்தார்கள் என்பது அவர்கள் ஒருவருக்கும் ஞாபகம் இல்லை, தமது வீட்டின் ஒவ்வொரு கதவையும் இறுக்கமாக மூடி மேசை கதிரைகளை கொணடு முட்டுக் கொடுத்தனர், சுற்றியுள்ள அறைகளில் படுக்காமல் நடு ஹோலில் படுப்பதாக முடிவு செய்தனர், எந்தப் பேச்சு சத்தமும் இல்லாமல் வெளியில் என்ன நடக்கிறது என்பதற்கு காது கொடுத்துக் கொணடிருந்தனர்.

மூன்றாவது நாளாகியும் அவர்கள் வெளியே வரவில்லை, இறுதியில் இனியும் பசியை பொறுக்க முடியாது என்ற கட்டத்தில் அவனும் சசியும் வெளியே சென்று சாப்பிடுவதற்கு ஏதாவது வாங்கி வருவது என முடிவு செய்தனர், 'டவுனுக்கு போனால் அங்க இருக்கிர தமிழ் கடைகளில ஏதாவது வாங்களாம்' என்ற பிரபா தொடர்ந்து றேடியோவை கேட்டுக் கொணடிருந்தான், இருட்டும் வரை இருந்து விட்டு அவனும் சசியும் பின்வாசல் வழியாக புறப்பட்டு இருட்டில் கரைந்தனர்.

சவுக்குக் காட்டினூடாக நடந்து வந்த அவர்கள் பேய்வீட்டுக்கு முன்னாள் உள்ள புதர்களினூடாக வெளியே வந்து நகரத்தினுல் பிரவேசித்தனர், நகரம் எந்தவித பதற்றமும் இல்லாமல் நியோன் விளக்குகளின் ஒளியில் மின்னிக் கொண்டிருந்தது, அவர்கள் சீவலி மகாவித்தியாலயத்துக்கு முன்னாள் வந்து கொணடிக்கும் போது பண்சாலையின் ஒலி பெருக்கியில் 'பஞ்ச சீலம்' ஓதப்பட்டுக் கொண்டிருந்தது அவர்கள் 'கல்யாணி' கபேயை நோக்கி நடந்தனர் அது மூடப்பட்டிருந்தது. மேலே உள்ள 'துரையின் கடைக்கு' போயினர் அதுவும் மூடப்பட்டிருந்தது. ஒவ்வொன்றாக பார்க்கும் போது நகரின் அனைத்து தமிழ் கடைகளும் மூடப்பட்டிருந்தன, அவர்கள் மெதுவாக 'சிங்ககிரி' பேக்கரியடிக்கு நடந்தனர் ஆனால் அவர்களால் உள்ளே போகப்பயமாக இருந்தது கடையின் வாசலில் நின்று கதைத்துக் கொண்டிருப்பவர்களின் சத்தம் வழக்கத்துக்கு மாறாக அதிகமாக இருந்தது, அவனுக்கு அங்கிருந்த சில முகங்கள் முகாமில் வைத்துக் கண்டவை போல இருந்தன கடைக்கு சில யார்கள் தள்ளியே அவன் சசியின் கையை இறுக்கிப்பிடித்து நிறுத்தினான் அவனுக்கு வியர்த்து ஊற்றிக் கொணடிருந்தது, பசி அவனை கடைநோக்கி இழுத்தாலும் பயம் அவனை நிறுத்தியது 30 நிமிடங்கள் அந்த இடத்தில் நின்ற அவர்கள் இறுதியில் திரும்பி விடுவது என முடிவு செய்தனர், அவர்கள் ஒரு பத்து அடிகள் எடுத்து வைத்திருப்பார்கள் சத்தமாக ஹோர்னை அடித்தபடி ஓரு பஸ் வந்து நின்றது. கடையின் முன்னாள் நின்றவர்கள் அனைவரும் பஸ்சில் இடம்பிடிக்க ஒடினர் அந்தக்காட்சியை பார்த்துக்கொணடிருந்த அவன் மெதுவாக பெரு மூச்சொன்றினை விட்டான், மனதால் உலகத்தில் உள்ள எல்லா தெய்வங்களுக்கும் நன்றி கூறிக்கொணடு கடையை நோக்கி நடந்தனர், எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் முதளாலியின் மகன் அவர்களைப்பார்த்து சிரித்தான் 'கொஹொமத மச்சாங்(எப்படி மச்சான்)'என்று கேட்க அவனுக்கு அவனைப்பர்த்து அழுவதா சிரிப்பதா என புரியவில்லை, அமைதியாக மூன்று இறாத்தல் 'பாண்' என்றான் முதளாலியின் மகனோ அவனுடைய நிலமை புரியாமல் நான் உன்iனை எங்கோபார்த்திருக்கிறேன் நீ கிரிக்கேட் விளையாடுவாயா? அவன் தலையை ஆட்ட ஒரு பாணை எடுத்து பையில் போட்டவாறு எனக்கு ஞாபகம் வருகிறது நீ 'புள்ஸ்' அணியை சேர்ந்தவன் தானே என்ற அவன் நீங்கள் தானே இந்தமுறையும் டிவிசன் கப்பை வென்றீர்கள் உங்களுடைய டீமின் 'முத்து' இப்போது எங்கே? அவன் ஒரு கிளாஸ் பெட்ஸ்மன் என்ற முதளாலியின் மகன் இவனைப்பார்த்து 'உம்பத் தெமளத? (நீயும் தமிழா?)' எனக்கேட்டான் அவன் இடிவிழுந்தது போல ஆனான், அவன் பாணைப்பார்த்தான் முதளாலியின் மகனது முகத்தைப்பார்த்தான் மூன்று நாள்ப் பட்டினி அவனை மீணடும் 'மறுதலிக்கச்' சொன்னது அவன் தனது வரண்ட தொண்டையை ஈரப்படுத்திக்கொண்டு 'நெ' இல்லை என்றான் ஓ 'நீ ஒருவன்தான் அந்த டீமில் சிங்களமா?' எனக்கேட்டவாறு அவன் பாணை நீட்ட கஸ்டப்பட்டு சிரித்தவாறே பானை வாங்கிய அவன் 'போய்வருகிரேன்' என்ற வாறு வெளியேவந்தான் வேகமாக நடந்து பேய்வீட்டைக் கடந்தபின் சவுக்குகாட்டுக்குள் வநததும், அவன் விக்கி விக்கி அழுதான்

அவனுக்கு எந்த தேவகுமாரனும் சொல்லியிருக்கவில்லை ஒரு இறாத்தல் பாணுக்காக நீ உன்னையே மறுதலிப்பாய் என்று! ஆனாள் அது நடந்தது!

ஜனநாயகமும் கருத்து சுதந்திரமும்!!!

ஒருவன் நூறு கோடி செலவு செய்து ஒரு திரைப்படம் எடுக்க எங்காவது குருகிய அரசியல் நோக்கங்களுக்காக இனவாத அமைப்புகளை உருவாக்கிக்கொண்டிருக்கும் சில கினற்றுத்தவளைகள் எதிர்ப்புக்காட்ட மக்களின் இயல்பியல் வாழ்க்கையுடன் எந்தவிதமான சம்பந்தமும் இல்லாத அரசாங்கங்கள் அநத்த திரைப்படத்தை தடை செய்துவிடும் இது இருபத்தியொராம் நூற்றாண்டின் ஜனநாயகம்.



இங்கு நமக்கு புரிந்து கொள்ள முடியாமல்... இருப்பது இந்த திரைப்படத்தில் தான் முதல்முறையாக முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக காட்டப்பட்டுள்ளதா? இதற்கு முன்னர் வெளிவந்த எண்பதுவீதமான திரைப்படங்களில் வில்லர்கள் பாக்கிஸ்தானுடன் தொடர்புபட்ட முஸ்லீம் பயங்கரவாதிகள் தானே.

தமிழ் சினிமாவை பொருத்தவரை வில்லனை சாராமல் கதாநாயகனை உருவாக்க முடியாது சரியாகச் சொல்வதானாள் 'சாத்தான் இல்லை என்றாள் கடவுள் காளாவதியாகிவிடுவார்' தமிழகத்தை பொருத்தவரை நேரடியான எதிர் தரப்பு ஒன்று இல்லாத காரனத்தாள் தமிழ் திரைப்படங்களை உருவாக்குபவர்கள் அந்த பயங்கர அரக்கனை வடக்கில் இருந்து இறக்குமதி செய்து கொள்கின்றனர் வட இந்தியாவை பொருத்தவரை பாகிஸ்தானிய பயங்கரவாதமே பொது அரக்கன்! அதே போல் மும்பாயையும் டெல்லியையும் குறிவைக்கும் பாகிஸ்தானிய தீவிரவாதத்தினதும் பரம எதிரி வடஇந்தியாதான் ஆனாள் தமிழகம் அவர்கள் பார்வையில் ஒரு பொருட்டே அல்ல தமிழகத்தை தாக்குவது என்பது அவர்கள் பட்டியலில் இருக்காது அப்படியானதொரு தாக்குதலை அவர்கள் திட்டமிட்டாள் புவியியல் றீதியாகப் பார்த்தாள் அதிக செலவும் இழப்பையும் தரக்கூடியது அவ்வாறு தாக்குவதன்மூலம் எட்டக்கூடியது மிககுறைவே ஆகவே பாகிஸ்தானிய முஸ்லீம் திவிரவாதம் என்னும் அரக்கன் எமது சினிமாப்படைப்பாளிகள் முட்டாளத்தனமாக இறக்குமதி செய்து கொண்ட வீண்வம்பே!

தமிழர்களின் உண்மையான எதிரிகளான தண்னீர் கொடுக்க மறுக்கும் கர்நாடக மற்றும் கேரள அரசியல்வாதிகள் தமிழர்களை கொத்து கொத்தாக கொன்று குவிக்கும் சிங்களவர்கள் இன்று விஸ்வரூபம் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அமைப்புகள் போன்ற இனவாத மற்றும் சாதியவாத அமைப்புகள் மிக முக்கியமாக தமிழக அரசியல்வாதிகள் போன்ற நிஜ அரக்கர்களை தமிழ் படங்களின் வில்லர்களாக காட்டுவதற்கான முதுகெலும்பு தமிழ் சினிமாக்காரர்களில் தொன்னூறு வீதமானவர்களுக்கு இல்லை அவர்களுடைய 'எஸ்கேபிசம்' தான் பாகிஸ்தானிய பயங்கரவாதி ஆகவே அந்த அரக்கன் இல்லாமல் உருவாகப்போகும் தமிழ் சினிமாக்களை நினைத்துப்பார்ப்பதற்கே அச்சமாக இருக்கிறது!!!

அது நிற்க இந்த ஜனநாயகத்தின் பின்னாள் மறைந்து கொண்டு மனிதர்களின் அடிப்படை உரிமைகளையே பறிக்கும் மதவாத அமைப்புகளது நிஜப் பயங்கரவாதம் எவ்வளவு தூரம் போகப்போகின்றது என்பது தான் எமது கேள்வி காதலர் தினம் கொண்டாடுபவர்களை சுற்றிவளைப்பது முதல் ஒரு பொழுதுபோக்கு சாதனமான திரைப்படம் வெளியிடுவதை தடுப்பதுவரை அவர்களது காட்டுத்தனம் வளர்ந்து கொண்டேவருகிரது அதுதான் ஜனநாயகமாம்! 'மிக வெளிப்படையாக சொல்ல வேண்டுமாயின் நீங்கள் இல்லாத கடவுளை எதுவிதமான ஆதாரமும் இல்லாமல் இருப்பதாக சொல்லிக்கொண்டு அந்தக்கடவுளின் பெயரால் கொலை செய்வதில் ஆரம்பித்து பூமி உருண்டையில்லை' என சொல்வது வரையான அனைத்து கோமளித்தனங்களை நாம் அனுமதிக்கவில்லையா இந்த ட்றெண்டுக்கு மக்களே முற்றுப்புள்ளி வைக்காவிட்டாள் மற்று மொரு பேரழிவை தடுக்க முடியாது போய்விடும்

இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி கொண்டாவது மதவாதிகளையும் சாதிய வாதிகளையும் நிராகரிக்க ஆரம்பிக்க வேண்டும் இல்லையேல் இன்னும் சில வருடங்களில் இவர்கள் நம்மை விலங்குகளை விட கீழ்த்தரமாக நடத்துவர் எனபதில் சந்தேகம் இல்லை!!!