வியாழன், 31 ஜனவரி, 2013

விஸ்வரூபமும் டிம்பக்டூவும்

நாம் எல்லாம் விஸ்வரூபத்தின் தடைபற்றி வாதிட்டுக் கொண்டிருக்கும் போது ஆபிரிக்காவின் மாளி நாட்டில் டிம்பக்டூ நகரில் அமைந்திருந்த அஹமத் பாபா நூலகத்திணை  தீயிட்டு எரித்துவிட்டனர் இந்த நூலகத்தில் 13ம் நூறாண்டு மற்றும் 14ம் 16ம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட ஆபிரிக்க இஸ்லாமிய வாலாற்று ஆவனங்கள் குர்-ஆன்கள் என பல பெறுமதிமிக் 2000 க்கும் அதிகமான அவனங்கள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன இந்த ஆவனங்களின் முக்கியத்துவம் என்னவென்றாள் மேற்கத்தையரது வருகைக்கு முன்னரான ஆபிரிக்க இஸ்லாமியர்கள் பற்றிய வரலாற்று பதிவுகளில் மேற்கத்தைய கிறிஸ்துவ ஆக்கிரமிப்பாளர்கள் அழித்தவை போக எஞ்சியிருந்த மிகச்சில ஆவனங்களை அஹமத் பாபா நூலகத்தில் பாதுகாத்து வைத்திருந்தனர்
மாளி நாட்டில் அரசுக்கு எதிராக போராடிவரும் இஸ்லாமிய கிளர்ச்சியாலர்கள் கடந்த 10 மாதங்களாகளாக டிம்பக்டூ உட்பட பல மாளிய நகரங்களை ஷரியா சட்டத்தின்கீழ் ஆட்சி செய்துவந்தனர் இந்த வாரம் மாளியின் முன்னாள் ஆட்சியாலாகளான பிரெஞ்சுப்படைகள் மாளிய அரசாங்கத்தின் உதவிக்கு வந்து கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக இறானுவ நடவடிக்கைகளை நடத்த தமது கட்டுப்பாட்டுக்குள் இருந்த பிரதேசங்களை விட்டு வெளியேறிய கிழர்ச்சியாலர்கள் டிம்பக்டூவை விட்டு வெளியேறும் முன் அவர்களது புனித நூலான திரு குர்-ஆன் மற்றும்  பல நூற்றாண்டு களாக பாதுகாக்கப்பட்டு வந்த  இஸ்லாமியர் வறளாற்றில் முக்கிய பதிவுகளை கொண்ட ஆவனங்களையும் தன்னகத்தே கொண்ட அஹமத் பாபா நூலகத்தினை தீயிட்டு எரித்துள்ளனர்
 
இதற்கிடையே தமிழ் நாட்டில் விஸ்வரூபம் திரைப்படம் தடை செய்யப்பட்டு தடை நீக்கப்பட்டு மீண்டும் தடை செய்யப்பட்டு மீண்டும்...! அட போங்கைய்யா போறதுக்கு காட்டுத் தனத்துக்கும் கேனைத்தனத்துக்கும் கோமாளித்தனத்துக்கும் ஒரு அளவில்லையா?
இங்கே ஒரு திரைப்படத்தில் திரு குர்-ஆன் பயங்கரவாதிகளின் கை நூளாக காட்டப்பட்டிருப்பதாக கொதிக்கும் மதவாதிகள் அங்கே முகமது நபி வாழ்ந்து இருநூறு ஆண்டுகளில் எழுதப்பட்ட வறளாற்று நுல்கள் அதே திரு குர்-ஆன் ஆகியவை எரிக்கப்பட்டுள்ளன அதைப்பற்றி ஒரு மூச்சும் விடவில்லை காரணம் எரித்த பயங்கரவாதிகளும் இஸ்லாமிய போராலிகள் என்பதாளா? ஆல்லது இந்தப்பயங்கரவாத அமைப்புகளுக்கு வேண்டிய பணமும் ஆயுதங்களும் கொடுப்பது அரேபியர்கள் என்பதாளா? ஆல்லது ஆபிரிக்க கருப்பர்கள் எதை எரித்தாள் என்ன நமக்கு முக்கியம் நம் அம்மாவின் அரசியல் என்பதாளா?

என்னவோங்க டிம்பக்டூவில் நடந்த கொடுரத்தை நாம் எதிர்க்கிறோம் மத நூல்களை எரித்ததற்காக அல்ல மனித வரளாற்றில் முக்கிய காலகட்டம் ஒன்று தொடர்பாக எமக்கிருந்த பதிவுகளை அழித்தமைக்காக
எம்மை பொருத்தவரை நூலகத்தை எரித்தவர்களுக்கும் இங்கு திரைப்படத்தை எதிர்ப்பவர்களுக்கும் இடையில் அவ்வளவு வித்தியாசம் தெரியவில்லை     

புதன், 30 ஜனவரி, 2013

மறுதளிப்பு



  அத்தருணத்தில் பேதுரு வெளியே வந்து அரமனை முற்றத்தில் உட்கார்ந்திருந்தான். அப்பொழுது, வேலைக்காரி ஒருத்தி அவனிடத்தில் வந்துஷ நீயும் கலிலேயனாகிய இயேசுவோடேகூட இருந்தாய் என்றாள். அதற்கு அவன் நீ சொல்லுகிறது எனக்குத் தெரியாது என்று, எல்லாருக்கும் முன்பாக மறுதலித்தான். அவன், வாசல் மண்டபத்திற்குப் போனபொழுது வேறொருத்தி அவனைக் கண்டுஷ இவனும் நசரேயனாகிய இயேசுவோடேகூட இருந்தான்... என்று அங்கே இருந்தவர்களுக்குச் சொன்னாள். அவனோ அந்த மனுஷனை நான் அறியேன் என்று ஆணையிட்டு, மறுபடியும் மறுதலித்தான். சற்றுநேரத்துக்குப்பின்பு அங்கே நின்றவர்கள் பேதுருவினிடத்தில் வந்துஷ மெய்யாகவே நீயும் அவர்களில் ஒருவன், உன் பேச்சு உன்னை வெளிப்படுத்துகிறது என்றார்கள். அப்பொழுது அவன்ஷ அந்த மனுஷனை அறியேன் என்று சொல்லி, சபிக்கவும் சத்தியம்பண்ணவும் தொடங்கினான். உடனே சேவல் கூவிற்று அப்போது தேவகுமாரன் சேவல் கூவுவதற்கு முன் நீ என்னை மறுதளிப்பாய் எனக்கூறியதை நினைத்து மனமுடைந்தான்

இது நடந்து 2000 ம் ஆண்டுகளுக்குப் பின் ஒரு ஒக்டோபர் மாதம் 26 ம் திகதியில் அதிகாலை சேவல் கூவும் சத்தத்துடன் எழுந்த அவன் அறையில் படுத்திருந்த மற்றவர்களின் தூக்கம் கலையாதவாறு வெளியேவந்து ஒரு கோள்ட்லீப்பை பற்றவைத்துக்கொண்டான் பனி படர்ந்த மலையகத்தின் அதிகாலை அழகாகத்தெரிந்தது தூரத்தில் தெரிந்த பூனாகலை மலைத்தொடரை உற்றுப்பார்த்துக்கொன்டிருந்த அவன் பதுளை றோட்டில் பொகும் வாகனங்களின் சத்தத்தாள் தனது கவனத்தை அந்நதப்பக்கமாக திருப்பினான் 5.50 செல்லும் மாத்தறை பஸ்சை பாத்த அவன் ஆறு மணியாகுது என முனு முனுத்தான்.

அவன் குளித்து முடித்துவிட்டு அறைக்குள் வரும்போது யோகா சுவாமி கும்பிட்டுக் கொண்டிருந்தான் சக்தி டிவியில் திருமகள் செய்தி வாசித்துக் கொண்டிருந்தாள் தனது உடைகளை அயன் பன்னிக்கொணடிருந்த ரவி 'கிளாஸ் முடிஞ்சு படத்துக்கு போவமா? றீகல்ல புதுப் படம் போட்டிருக்கிறான்' என்றான் அவன் தனது டெனிம் காட்சட்டையை உதறியவாறே என்ன படம்? என்று கேட்க 'பேர் ஞாபகம் இல்ல அடல்ஸ் ஒன்லீன்னு போட்டிருந்தான்' என்று கூறிய ரவி தன் சப்பாத்துக்களை பொலிஸ் பண்ணத் தொடங்கினான்இ டிவிக்கு முன்னால் உட்கார்ந்து கெரம் விளையாடிக்கொண்டிருந்த சசியும் பிரபாவும் ஏதோ அவனது அனுமதிக்காக காத்திருப்பது பொள் அவனை உற்றுப்பார்த்தனர்' அவனோ எந்தவித உனர்வுமின்றி சரி போவம்' என்றான் உடனே சசி '6..30 க்கு போவம் 2.00 மணிக்கு சரக்குக்கு வாரதா சொல்லியிருக்கிறன்' என்றான் 'நீங்க அங்க போக அவ்வளவு நேரம் நாங்க என்ன மயிர புடுங்கிரதா?' என்று பிரபா கொபமாக கேட்க
'லைப்ரறிக்கு போ படிக்கத்தானே வந்திருக்கிறீங்க போய்படி' என்று நக்கலாக சொன்ன சசி கெரம் போர்ட்டை விட்டு எழுந்து குளிக்கப் புறப்பட்டான்;.

அவர்கள் 5 பேரும் பண்டாரையின் கடையடிக்கு வரும்போது நேரம் 8 மணி ஆகியிருந்தது, பண்டா ரவளை நகருக்குள் எத்தனை கடைகள் இருந்தாலும் பண்டாரையின் கடைதான் அவர்களுக்குப் பத்தியர்hட்டது அது ஒரு ஹோட்டலோ சாப்பாட்டுக்கடையோ இல்லை என்றாலும் பலசரக்குக் கடையின் ஒரு மூலையில் ஒரு மேசையும் நான்கு கதிரைகளும் போடப்பட்டிருந்தன அருகில் உள்ள வீடொன்றில் தயாரிக்கப்படும் சிறிய இடியப்ப பார்சல்களும், அப்பமும், பாணும், பால் சொதியும், என அங்கிருக்கும் சாப்பாடு டவுன் ஹோட்டல்களை விட சுவையாக இருந்தது பண்டாறையின் மனைவி சுவர்னமாலியை 'கொஹொமத மாளி அக்கே?' எனக்கேட்டவாறு கடைக்குள் நுளைந்தனர். இடியப்பமும், பால் சொதியும் ஓடர் செய்துவிட்டு அவர்கள் போய் உட்கார ரவி மட்டும் கடைக்கு முன்னால் தொங்கவிடப்பட்டிருந்த வாழைக்குiலையிலிருந்து ஒரு பழத்தை பறித்துக் கொண்டே வழக்கமாக கடையில் நிற்கும் பண்டாரயை கானாததாள் 'கோ பண்டார அய்யா?' எனக்கேட்டவாறு சுவர்னமாலியுடன் கதைத்துக் கொன்டிருந்தான் அந்த வீட்டை அவர்கள் வாடகைக்கு எடுத்ததில் இருந்தே சுவர்னமாலி மீது ரவிக்கு ஒரு ஈடுபாடு இருந்தது அது படிப்படியாக வளர்ந்து இறுதியில் மாலிக்கும் ரவிமீது ஈடுகாடு வந்தது அது தொடர்கதையாகப் போய்க் கொண்டிருந்தாலும் பண்டார இருக்கும் போது இருவருமே அடக்கி வாசிப்பார்கள் இன்று சந்தர்ப்பம் நன்றாகவே அமைந்திருக்கின்றது!

அவர்கள் 5 பேரும் ஹரி வீடியோவுக்குள் நுளையும் போது ஏளெட்டுத் தலைகள் தென்பட்டன, பின் அறை வாசலில் நின்று 'விரகேசரி' பேப்பர் பார்த்துக் கொண்டிருந்த சிவா அண்ணை 'குட்மோனிங்' என்றார் பதிலுக்கு 'குட் மொனிங்' என்ற அவன் 'பேப்பரில என்ன இருக்கு?' என்றான் தலையை துர்க்கிப்பாhத்த சிவா அண்ணை 'எழுத்து இருக்கு என்றார்' 'அந்த பு...... எங்களுக்கும் தெரியும்! என்ன செய்தி இருக்கு?' என்றான் 'எரிக் சோல்கைம் வாராராம், சந்திரிக்காவுக்கும் கெபினட்டுக்கும் இடையில திருப்பியும் பிரச்சினையாம்' என்றான் சிவா

எல்லொரும் இருந்த நாலு சிகரட்டையும் இழுத்துவிட்டு, அரட்டை அடித்துக் கொண்டிருந்த போது கீழ் கடையில் வேலை செய்யும் குமார் அவசர அவசரமாக கடைக்குள் வந்து 'பிந்துனுவேவாவிலை பிரச்சினையாம் பொலிஸ் ஆமி வாகனம் எல்லாம் பறக்குது!' என்றான் 'என்ன பிரச்சினை?' என்று சிவா அண்ணை கேட்க 'தெரியாது முதலாளியை கேட்டுப்பாருங்க?' என்றவாறு மீண்டும் வெளியே ஒடினான் அவனைத் தொடர்ந்து வெளியே போன சிவா அண்ணை பத்துநிமிடம் கழித்து வரும்போது சிவத்துப்போயிருந்தார்! 'காம்பிலை இருக்கிர பொடியல் காவலுக்கு இருந்த பொலிசையும் அடிச்சு போட்டு ஊருக்க போயி அட்டாக் பனுறாங்களாம்!' என்ற போது அவர்கள் திகைத்துப் போனார்கள், பிந்துனுவௌh புனருத்தாரண முகாமானது 1987, 88 களில் கிளர்ச்சியில் ஈடுபட்ட ஜே வி பி உறுப்பினர்களை தடுத்து வைத்து புனருத்தாரணம் செய்வதற்கென இழைஞ்ஞர் சேவைகள் சபையினாலும், புனருததாரன அமைச்சு, மற்றும் பாதுகாப்பு அமைச்சு என்பவற்றாள் உருவாக்கப்பட்டது ஜே வி பி காரர்கள் திருந்திய! பின் 'தமிழ் போராலி' அமைப்புகளில் இருந்து வெளியேறும் நபர்களை தடுத்துவைத்து புனருத்தாரனம் செய்வதற்க நடத்தப்பட்டுவந்தது. தற்போது அந்த முகாமில் 40 'தமிழர்கள் கைதிகளா, அல்லது முகாம் வாசிகளா, அல்லது முன்னாள் போராளிகளா, என்பதை புரிந்து கொள்ள முடியாத நிலையில் வசித்துவருகின்றனர்'

அந்த 40 பேரையும் இவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. அவர்களுக்கும், நகரத்தில் இருந்த இளைஞர் கழகங்களுக்கும் இடையில் கிறிக்கேட் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், இரவு முகாம்கள், என அவர்களை புனருத்தாரணம் செய்யும் திட்டத்தின் ஒரு பகுதியாக தொடர்ச்சியான நிகழ்ச்சிகள் நடை பெற்றன அங்கு செல்லும், ஏனைய இளைஞ்ஞர் கழகங்களைவிட இவர்களது கழகத்தினரும் முகாம் வாசிகளும் அதிக நெருக்கமானார்கள் காரனம். இவர்களும் தமிழ் அவர்களும் தமிழ் முகாம் வாசிகளை பொருத்தவரை தம்மை அடிக்கடி சந்திக்கும் உறவுகளாக இவர்கள்தான் இருந்தனர். இந்த உறவு வளர வாரஇறுதிகளில் கிரிக்கேட் விளையாடுவதும் அவர்கள் இவர்களுக்காக சமைப்பதும் வழக்கமகியிருந்தது

அவனைப்பார்த்த சிவா அண்ணை 'போய்பார்த்திட்டுவருவமா?' எனக்கேட்க தலையை ஆட்டிய அவன் யோகாவிடம் 'நீங்கள் கிளாசுக்கு போங்க நான் சிவா அண்ணையோட போய் பார்த்திட்டு வாறன்' என்றான் சிவாவின் மொட்டாசைக்கில் பிந்துனுவௌ சந்தியை கடக்கும் போது அங்கே சனம் கூடியிருப்பதையும் பொலிஸ் வாகனங்கள் ஆங்காங்கே நிற்பாட்டப் பட்டிருப்பதையும் பார்த்த அவன் மேல போவம் என்றான். அந்த சிறிய மலைப்பாங்கான றோட்டில் சென்ற அவர்களது மோட்டார் சைக்கில் முகாமின் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் உள்ள றோட்டிற்கு சென்ற போது அதற்கு அப்பாள் போக முடியாத வாறு வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்பட்டிருப்பதை கண்டனர், மோட்டாசைக்கிலை நிற்பாட்டிய சிவாஅண்ணை 'இத இங்க விட ஏலாது நான் எங்கயாவது பாதுகாப்பான இடமாப்பாத்து விடடிட்டு வாறன் நீங்கள் நில்லுங்க' என்றார் சைக்கிளை வி;ட்டு இறங்கிய அவன் அந்த வாகனங்களுக்கூடாக நடந்தான் றோட்டைவிட்டு விலகிய அவன் கம்பிவேலிக்கூடாக புகுந்து முகாமின் வளவுக்குள் பிரவேசித்தான், பல ஏக்கர்களில் பரந்திருந்த முகாமின் மைதானததிற்கு இடப்பக்கமாக இருந்த குன்றின் மீது ஏறிய அவனுக்கு அந்த முகாமின் அனைத்துப்பகுதிகளும் தெரிந்தன அவன் நின்ற இடத்தில் பல நூற்றுக்கனக்கானவர்கள் நின்று வேடிக்கைப் பார்த்து கொணடிருந்தனர். அவனுக்கு அந்த முகாமின் மையப்பகுதி 'ஒரு கலைந்த எறும்புக் கூடு' போல் தெரிந்தது ஆயிரக்கணக்கானவர்கள் கத்திகள், பொல்லுகள், அலவாங்குகள், எனக் கையில் அகப்பட்டவற்றை எடுத்துக் கொண்டு அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தனர். முகாமின் பிரதான நுளைவாயில் பக்கமாக நூற்றுக்கனக்கான 'பொலிசார்' ஆயுதம் தரித்த வண்ணம் நின்று கொணடிருந்தனர். முகாமின் மையப்பகுதியில் பச்சை நிறத்திலான ஆறு கட்டங்கள் இருந்தன ஒவ்வன்றும், 150 அடி நீளமான மண்டபங்கள் வெளிப்புறமாக இருந்து பார்க்கும் போது இராணுவ முகாம்களில் உள்ள கட்டடங்களை நினைவு படுத்தின இவற்றுள் மூன்றாவது கட்டடத்தில் தான் முகாம் பொருப்பாளர் 'லெப்டினன் பண்டாரவின்' காரியாளயம் உள்ளது, ஏனைய மூன்றில் இளைஞர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர், மற்றயது சமையலறை மற்றும் களஞசிய அறைகளை கொண்டது, 6வது கட்டடம் சில நாட்களுக்கு முன்னர்தான் இளைஞர்களாளல் 'கோயிலாக' மாற்றப்பட்டு பராமறிக்கப்பட்டு வந்தது.
மலைக்குன்றின் மீது நின்று கொண்டிருந்த அவனுக்கு கிராமவாசிகளையும் பொலிசாரையும் 'தாக்கியதாக' கூறப்பட்ட இளைஞர்கள் எவரையும்' காணமுடியவில்லை! அவன் பொலிசாரை உற்றுப்பார்த்தான் அவர்கள் முழுமையாக தயார்நிலையில் நின்றனர்! என்ற போதும் எதற்காகவோ காத்திருந்தனர், அதே நேரம் முகாமுக்குள் நின்ற ஆயுததாரிகள் ஒரு கட்டடத்தை சூழ்ந்து கொண்டு அதன் கதவுகளையும் ஜன்னல்களையும் உடைக்க முயன்று கொன்டிருந்தனர், சில நிமிடப் போராட்டத்திற்குபின் ஒரு கதவு உடைக்கப்பட ஆயுததாரிகள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தவாறு கட்டடத்திற்குள் நுiளைய முயன்றனர், இதற்கிடையே திடீரென ஏனைய கதவுகளை திறந்து கொண்டு அந்த இளைஞர்கள் வெளியே ஒடிவந்தனர்! அவர்கள் ஒரு பத்தடிகள் ஒடுவதற்குள் ஆயுததாரிகள் கூட்டம்கூட்டமாக சூழ்ந்து கொண்டு தமது ஆயுதங்களால் தாக்க ஆரம்பித்தனர், வெளியே வந்த ஒவ்வரு இளைஞனையும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சூள்ந்து கொண்டு தாக்கிக்கொணடிருந்தனர், அலறல்களும் மரனஓலங்களையும் மீறி மகிழ்ச்சி ஆரவாரங்கள் ஒலித்தன, நடப்பவற்றை பார்த்துக்கொணடிருந்த அவன் அப்படியேகல்லாக நின்றான். இதற்கிடையே, தாக்குதலாளிகளின் கவனம் முதலில் வெளியே வந்தவர்கள் மீதிருக்க. சில இளைஞர்கள் தமது உயிரை பாதுகாத்துக் கொள்ளும் இறுதி முயற்சியாக பொலிசாரை நோக்கி ஓடினர் அவர்கள் பாதுகாப்புத் தேடி தம்மை நோக்கி ஒடிவருவதைக்கண்ட பொலிசார் திடீரென அவர்களை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்ய ஆரம்பித்தனர்! சூடுபட்டு விழுந்தவர்களை கொலையாளிகள் தாக்கி இழுத்துச் சென்றனர், துப்பாக்கிச் சூட்டிலிருந்தும் தப்பிய மூவர் பொலிசாரிடமும் தமக்கு பாதுகாப்பு இல்லை என்பதை உனர்ந்து பொலிஸ் வாகனங்கள் நின்ற திசையில் ஒடிச்சென்று அருகில் நிறுத்தப்பட்டிருந்த பொலிஸ் வண்டிக்குள் தாவி ஏறிக் கொணடனர், அரை நிமிடத்pற்குள் கொலையாளிகள் குழு ஒன்று வண்டியை சூழ்ந்து கொண்டாலும் வண்டியை தாக்கத் தயங்கினர் அவர்கள் கதவுகளை இழுத்துப்பார்த்தாலும் அவை இளைஞர்களாள் லொக் பண்ணப்பட்டிருந்தது நிலமையை 'புரிந்து கொண்ட' ஒரு பொலிஸ் அதிகாரி சைகை செய்ய கையில் திறப்பை வைத்திருந்த பொலிகாரர் கதவினை திறந்து விட்டார்! உடனே கொலையாளிகள் வகனத்தினுள்ளே ஏறி அவர்களை இழுத்துச் சென்றனர், இதற்கிடையே கொலையாளிகளால் கோவில் அமைந்த மண்டபத்திற்கு தீ மூட்டப்பட்டிருந்தது! அதனை தொடர்ந்து ஏனைய கட்டடங்களுக்கும் தீ வைக்கப்பட்டன, அதனைத் தொடர்ந்து தாக்கப்பட்டு குற்றுயிராக விழுந்து கிடந்தவர்களை ஒவ்வருவராக இழுத்துச்சென்று எரியும் 'நெருப்பில்' எறிந்தனர்! அப்போதும் 'பொலிசார்' பதற்றமடையாமல் பார்த்துக்கொண்டிருந்தனர்! கொலையாளிகள் சிறுகுழுக்களாக சென்று விழுந்து கிடந்த சடலங்களை புரட்டி உயிர் உள்ளதா எனப் பாhத்து மீண்டும் தாக்கினர், இவை அனைத்தும் ஒரு பதினைந்து நிமிடங்களுக்குள் நடந்து முடிந்தன. அவன் சிலையாக நின்றான் அடுத்து என்ன நடக்கும் என்பதை அவனால் சிந்திக்க முடியவில்லை, இருதினங்களுக்கு முன், கடந்த சனிக்கிழமை உணவு சமைத்து, தமக்கு பரிமாறிய ஒவ்வரு இளைஞனும் கொலை செய்யப்படுவதை பார்த்துக் கொன்டிருந்தான். அப்போது அவன் அருகில் நின்று கொணடிருந்த கூட்டத்தில் இருந்து 'ஒருவன்' அவனைப்பார்த்து 'தமுசெ தெமள நேத (நீ தமிழ் தானே)' 'உன்னை அவர்களுடன் பாhத்திருக்கிறேன்' என்றான் அவன் அவசரமாக 'நெ நெ' இல்லை இல்லை நான் தமழ் இல்லை என மறுதலித்தான்! இதற்கிடையே பொலிசார் வானத்தை நோக்கி சுட அனைவரது கவனமும் அந்தப்பக்கம் திரும்பியது, அவன் அந்த இடத்திலிருந்து நழுவினான.;

நாற்காலியில் அமர்ந்திருந்த அவன் நடுங்கிக் கொண்டிருந்தான், உள்ளுக்குள் லேசாக காய்ச்சல் காய்ந்து கொண்டிருந்தது 'ரூபவாகினி செய்திகள்' 'பயங்கரவாதிகளுக்கும்' பிந்துனு வேவா கிராமவாசிகளுக்கும் இடையில் நடை பெற்றமோதலில், முகாமில் இருந்த 'பயங்கரவாதிகளுள்' 27 பேர் கொல்லப்பட்டதாகவும். ஏனையவர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் 'அப்பாவி' கிராமவாசிகள் எவரும் கொல்லப்படவோ காயப்படவோ இல்லை எனவும் தெரிவித்தது, அவனுக்கு தலை சுற்றுவது போல் இருந்தது அன்று காலையில் சாப்பிட்ட இடியப்பத்தை தவிர, அன்றைய நாலுக்கு அவன் எதுவுமே சாப்பிட்டிருக்கவில்லை பயம் அதிர்ச்சி தடுமாற்றம் போன்ற எல்லா உணர்வுகளும் ஒன்று சேர்ந்து ஒரு விதமான பசியை உண்டுபண்ணியது. 'ஏதாவது சப்பிடுவமா?' என யோகாவைப் பார்த்து கேட்டான் 'இப்ப 7 மணி டவுணுக்கு போக ஏலாது பக்கத்துகடையில் பாண் வாங்குவம்' என்று சொன்ன ரவி 'நான் பொயிட்டுவாரன்' என எழுந்தான், அவன் என்ன நினைத்தானோ 'இல்ல எல்லாரும் போவம்' என்றான், கடையை நொக்கி நடந்து கொண்டிருந்த அவர்களிடையே வளக்கமான பகிடிகளையோ தூசணங்களையோ காணமுடியவில்லை, மௌனம்தான் ஓங்கிநின்றது பண்டாரவின் கடைவாசலுக்கு வந்த அவர்கள் வெளியே நிற்க, உள்ளே சென்ற ரவி 'பாண் தெக்கய் பண்டார அய்யெ' என்று காசை நீட்ட வளக்கமாக வாய் நிறைய பல்லாய் அவர்களை பார்த்துச் சிரிக்கும் பண்டார முகத்தை இறுக்கமாகவைத்துக் கொண்டு 'பாண் நெ' என்றான் அவனுக்குப்பின்னால் இருந்த கண்னாடிப்பெட்டிக்குள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பாணை பார்த்துக் கொண்டே 'விளையாட வேண்டாம் பண்டார அய்யே' என்றான் ரவி. 'நான் இப்ப உனக்கு ஒரு முறை சொன்ன நான் தானே பாண் இல்லை என பண்டார உரத்துச் சொன்னான்

சத்தம் கேட்டு மற்றயவர்களுடன் அவன் கடைக்குள்ளே சென்று கொண்டே யோசித்தான் சில இரவுகளில் வெளியே செல்லும் ரவி மாலியைப் பார்க்கத்தான் போகிறான் என்பது அவனுக்கு தெரியும், ஆனாள் அது பண்டாரவுக்கு தெரிய எந்தவித வாய்ப்பும் இல்லை என்றுதான் ரவி சொன்னான் ஆனாள் பல நாள் திருடன் இன்று அகப்பட்டு விட்டான் போல இருக்கிறது என்று நினைத்த அவன், பண்டாரவினைப் பார்த்து சிரித்தவாறே 'என்ன பண்டார அய்யெ என்ன பிரச்சினை? ' என்றான் சிரிக்காத பண்டார தெமழுண்ட தென்ட மெஹெ பாங் நே! (தமிழர்களுக்கு கொடுக்க எங்களிடம் பாண் இல்லை!) என்று உறுதியாகச் சொன்னான்.

அவர்கள் எல்லோரும் எப்படி அந்தக்கடையை விட்டு வெளியே வந்தார்கள் என்பது அவர்கள் ஒருவருக்கும் ஞாபகம் இல்லை, தமது வீட்டின் ஒவ்வொரு கதவையும் இறுக்கமாக மூடி மேசை கதிரைகளை கொணடு முட்டுக் கொடுத்தனர், சுற்றியுள்ள அறைகளில் படுக்காமல் நடு ஹோலில் படுப்பதாக முடிவு செய்தனர், எந்தப் பேச்சு சத்தமும் இல்லாமல் வெளியில் என்ன நடக்கிறது என்பதற்கு காது கொடுத்துக் கொணடிருந்தனர்.

மூன்றாவது நாளாகியும் அவர்கள் வெளியே வரவில்லை, இறுதியில் இனியும் பசியை பொறுக்க முடியாது என்ற கட்டத்தில் அவனும் சசியும் வெளியே சென்று சாப்பிடுவதற்கு ஏதாவது வாங்கி வருவது என முடிவு செய்தனர், 'டவுனுக்கு போனால் அங்க இருக்கிர தமிழ் கடைகளில ஏதாவது வாங்களாம்' என்ற பிரபா தொடர்ந்து றேடியோவை கேட்டுக் கொணடிருந்தான், இருட்டும் வரை இருந்து விட்டு அவனும் சசியும் பின்வாசல் வழியாக புறப்பட்டு இருட்டில் கரைந்தனர்.

சவுக்குக் காட்டினூடாக நடந்து வந்த அவர்கள் பேய்வீட்டுக்கு முன்னாள் உள்ள புதர்களினூடாக வெளியே வந்து நகரத்தினுல் பிரவேசித்தனர், நகரம் எந்தவித பதற்றமும் இல்லாமல் நியோன் விளக்குகளின் ஒளியில் மின்னிக் கொண்டிருந்தது, அவர்கள் சீவலி மகாவித்தியாலயத்துக்கு முன்னாள் வந்து கொணடிக்கும் போது பண்சாலையின் ஒலி பெருக்கியில் 'பஞ்ச சீலம்' ஓதப்பட்டுக் கொண்டிருந்தது அவர்கள் 'கல்யாணி' கபேயை நோக்கி நடந்தனர் அது மூடப்பட்டிருந்தது. மேலே உள்ள 'துரையின் கடைக்கு' போயினர் அதுவும் மூடப்பட்டிருந்தது. ஒவ்வொன்றாக பார்க்கும் போது நகரின் அனைத்து தமிழ் கடைகளும் மூடப்பட்டிருந்தன, அவர்கள் மெதுவாக 'சிங்ககிரி' பேக்கரியடிக்கு நடந்தனர் ஆனால் அவர்களால் உள்ளே போகப்பயமாக இருந்தது கடையின் வாசலில் நின்று கதைத்துக் கொண்டிருப்பவர்களின் சத்தம் வழக்கத்துக்கு மாறாக அதிகமாக இருந்தது, அவனுக்கு அங்கிருந்த சில முகங்கள் முகாமில் வைத்துக் கண்டவை போல இருந்தன கடைக்கு சில யார்கள் தள்ளியே அவன் சசியின் கையை இறுக்கிப்பிடித்து நிறுத்தினான் அவனுக்கு வியர்த்து ஊற்றிக் கொணடிருந்தது, பசி அவனை கடைநோக்கி இழுத்தாலும் பயம் அவனை நிறுத்தியது 30 நிமிடங்கள் அந்த இடத்தில் நின்ற அவர்கள் இறுதியில் திரும்பி விடுவது என முடிவு செய்தனர், அவர்கள் ஒரு பத்து அடிகள் எடுத்து வைத்திருப்பார்கள் சத்தமாக ஹோர்னை அடித்தபடி ஓரு பஸ் வந்து நின்றது. கடையின் முன்னாள் நின்றவர்கள் அனைவரும் பஸ்சில் இடம்பிடிக்க ஒடினர் அந்தக்காட்சியை பார்த்துக்கொணடிருந்த அவன் மெதுவாக பெரு மூச்சொன்றினை விட்டான், மனதால் உலகத்தில் உள்ள எல்லா தெய்வங்களுக்கும் நன்றி கூறிக்கொணடு கடையை நோக்கி நடந்தனர், எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் முதளாலியின் மகன் அவர்களைப்பார்த்து சிரித்தான் 'கொஹொமத மச்சாங்(எப்படி மச்சான்)'என்று கேட்க அவனுக்கு அவனைப்பர்த்து அழுவதா சிரிப்பதா என புரியவில்லை, அமைதியாக மூன்று இறாத்தல் 'பாண்' என்றான் முதளாலியின் மகனோ அவனுடைய நிலமை புரியாமல் நான் உன்iனை எங்கோபார்த்திருக்கிறேன் நீ கிரிக்கேட் விளையாடுவாயா? அவன் தலையை ஆட்ட ஒரு பாணை எடுத்து பையில் போட்டவாறு எனக்கு ஞாபகம் வருகிறது நீ 'புள்ஸ்' அணியை சேர்ந்தவன் தானே என்ற அவன் நீங்கள் தானே இந்தமுறையும் டிவிசன் கப்பை வென்றீர்கள் உங்களுடைய டீமின் 'முத்து' இப்போது எங்கே? அவன் ஒரு கிளாஸ் பெட்ஸ்மன் என்ற முதளாலியின் மகன் இவனைப்பார்த்து 'உம்பத் தெமளத? (நீயும் தமிழா?)' எனக்கேட்டான் அவன் இடிவிழுந்தது போல ஆனான், அவன் பாணைப்பார்த்தான் முதளாலியின் மகனது முகத்தைப்பார்த்தான் மூன்று நாள்ப் பட்டினி அவனை மீணடும் 'மறுதலிக்கச்' சொன்னது அவன் தனது வரண்ட தொண்டையை ஈரப்படுத்திக்கொண்டு 'நெ' இல்லை என்றான் ஓ 'நீ ஒருவன்தான் அந்த டீமில் சிங்களமா?' எனக்கேட்டவாறு அவன் பாணை நீட்ட கஸ்டப்பட்டு சிரித்தவாறே பானை வாங்கிய அவன் 'போய்வருகிரேன்' என்ற வாறு வெளியேவந்தான் வேகமாக நடந்து பேய்வீட்டைக் கடந்தபின் சவுக்குகாட்டுக்குள் வநததும், அவன் விக்கி விக்கி அழுதான்

அவனுக்கு எந்த தேவகுமாரனும் சொல்லியிருக்கவில்லை ஒரு இறாத்தல் பாணுக்காக நீ உன்னையே மறுதலிப்பாய் என்று! ஆனாள் அது நடந்தது!

ஜனநாயகமும் கருத்து சுதந்திரமும்!!!

ஒருவன் நூறு கோடி செலவு செய்து ஒரு திரைப்படம் எடுக்க எங்காவது குருகிய அரசியல் நோக்கங்களுக்காக இனவாத அமைப்புகளை உருவாக்கிக்கொண்டிருக்கும் சில கினற்றுத்தவளைகள் எதிர்ப்புக்காட்ட மக்களின் இயல்பியல் வாழ்க்கையுடன் எந்தவிதமான சம்பந்தமும் இல்லாத அரசாங்கங்கள் அநத்த திரைப்படத்தை தடை செய்துவிடும் இது இருபத்தியொராம் நூற்றாண்டின் ஜனநாயகம்.



இங்கு நமக்கு புரிந்து கொள்ள முடியாமல்... இருப்பது இந்த திரைப்படத்தில் தான் முதல்முறையாக முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக காட்டப்பட்டுள்ளதா? இதற்கு முன்னர் வெளிவந்த எண்பதுவீதமான திரைப்படங்களில் வில்லர்கள் பாக்கிஸ்தானுடன் தொடர்புபட்ட முஸ்லீம் பயங்கரவாதிகள் தானே.

தமிழ் சினிமாவை பொருத்தவரை வில்லனை சாராமல் கதாநாயகனை உருவாக்க முடியாது சரியாகச் சொல்வதானாள் 'சாத்தான் இல்லை என்றாள் கடவுள் காளாவதியாகிவிடுவார்' தமிழகத்தை பொருத்தவரை நேரடியான எதிர் தரப்பு ஒன்று இல்லாத காரனத்தாள் தமிழ் திரைப்படங்களை உருவாக்குபவர்கள் அந்த பயங்கர அரக்கனை வடக்கில் இருந்து இறக்குமதி செய்து கொள்கின்றனர் வட இந்தியாவை பொருத்தவரை பாகிஸ்தானிய பயங்கரவாதமே பொது அரக்கன்! அதே போல் மும்பாயையும் டெல்லியையும் குறிவைக்கும் பாகிஸ்தானிய தீவிரவாதத்தினதும் பரம எதிரி வடஇந்தியாதான் ஆனாள் தமிழகம் அவர்கள் பார்வையில் ஒரு பொருட்டே அல்ல தமிழகத்தை தாக்குவது என்பது அவர்கள் பட்டியலில் இருக்காது அப்படியானதொரு தாக்குதலை அவர்கள் திட்டமிட்டாள் புவியியல் றீதியாகப் பார்த்தாள் அதிக செலவும் இழப்பையும் தரக்கூடியது அவ்வாறு தாக்குவதன்மூலம் எட்டக்கூடியது மிககுறைவே ஆகவே பாகிஸ்தானிய முஸ்லீம் திவிரவாதம் என்னும் அரக்கன் எமது சினிமாப்படைப்பாளிகள் முட்டாளத்தனமாக இறக்குமதி செய்து கொண்ட வீண்வம்பே!

தமிழர்களின் உண்மையான எதிரிகளான தண்னீர் கொடுக்க மறுக்கும் கர்நாடக மற்றும் கேரள அரசியல்வாதிகள் தமிழர்களை கொத்து கொத்தாக கொன்று குவிக்கும் சிங்களவர்கள் இன்று விஸ்வரூபம் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அமைப்புகள் போன்ற இனவாத மற்றும் சாதியவாத அமைப்புகள் மிக முக்கியமாக தமிழக அரசியல்வாதிகள் போன்ற நிஜ அரக்கர்களை தமிழ் படங்களின் வில்லர்களாக காட்டுவதற்கான முதுகெலும்பு தமிழ் சினிமாக்காரர்களில் தொன்னூறு வீதமானவர்களுக்கு இல்லை அவர்களுடைய 'எஸ்கேபிசம்' தான் பாகிஸ்தானிய பயங்கரவாதி ஆகவே அந்த அரக்கன் இல்லாமல் உருவாகப்போகும் தமிழ் சினிமாக்களை நினைத்துப்பார்ப்பதற்கே அச்சமாக இருக்கிறது!!!

அது நிற்க இந்த ஜனநாயகத்தின் பின்னாள் மறைந்து கொண்டு மனிதர்களின் அடிப்படை உரிமைகளையே பறிக்கும் மதவாத அமைப்புகளது நிஜப் பயங்கரவாதம் எவ்வளவு தூரம் போகப்போகின்றது என்பது தான் எமது கேள்வி காதலர் தினம் கொண்டாடுபவர்களை சுற்றிவளைப்பது முதல் ஒரு பொழுதுபோக்கு சாதனமான திரைப்படம் வெளியிடுவதை தடுப்பதுவரை அவர்களது காட்டுத்தனம் வளர்ந்து கொண்டேவருகிரது அதுதான் ஜனநாயகமாம்! 'மிக வெளிப்படையாக சொல்ல வேண்டுமாயின் நீங்கள் இல்லாத கடவுளை எதுவிதமான ஆதாரமும் இல்லாமல் இருப்பதாக சொல்லிக்கொண்டு அந்தக்கடவுளின் பெயரால் கொலை செய்வதில் ஆரம்பித்து பூமி உருண்டையில்லை' என சொல்வது வரையான அனைத்து கோமளித்தனங்களை நாம் அனுமதிக்கவில்லையா இந்த ட்றெண்டுக்கு மக்களே முற்றுப்புள்ளி வைக்காவிட்டாள் மற்று மொரு பேரழிவை தடுக்க முடியாது போய்விடும்

இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி கொண்டாவது மதவாதிகளையும் சாதிய வாதிகளையும் நிராகரிக்க ஆரம்பிக்க வேண்டும் இல்லையேல் இன்னும் சில வருடங்களில் இவர்கள் நம்மை விலங்குகளை விட கீழ்த்தரமாக நடத்துவர் எனபதில் சந்தேகம் இல்லை!!!